அதிக வருமானத்தை ஈட்டுவதைப் போலவே குறைவான நஷ்டம் என்பது முக்கியம்
நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் பல விதமான ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும்
முதலீட்டு விருப்பங்களின் ஸ்கோர்கள் எதுவாக இருந்தாலும், அதிக வருமானம் வேண்டுமென்றால் அபாயங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அபாயம் எனும் கூறு உங்கள் முதலீடுகளை புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் திட்டமிட உதவும்.
பல முதலீட்டாளர்கள் பயத்தின் விளைவாக விற்பனையில் ஈடுபடுகின்றனர், ஏனெனில் தங்கள் முதலீட்டின் மதிப்பு குறைவதை அவர்கள் பார்க்க விரும்புவதில்லை. மேலும் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்காக அவர்கள் பத்திரங்களில் கண்மூடித்தனமாக முதலீடு செய்திருந்தால், இதுவே அவர்கள் அச்சமடைய ஒரு காரணமாக அமைகிறது. ஆனால் அவர்கள் தங்கள் விருப்பங்களில் நம்பிக்கை வைத்திருந்தால் மற்றும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்திருந்தால், இழப்புகள் நிதிச் சந்தைகளில் முதலீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற உண்மையை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
அந்தக் கண்காணிப்பு சரியாகவே இருந்தாலும், பணத்தை இழப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை. அனைவரும் தவறுகளைச் செய்கிறோம் ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொண்டு சரிசெய்தால் நன்றாக இருப்போம். இந்த ஆலோசனையை வாழ்க்கையில் பின்பற்றுவது கடினமாக இருக்கலாம் ஆனால் நிதிச் சந்தைகளில் நாம் செய்யும் தவறுகளுக்கு இதைப் பின்பற்றுவது கடினம் இல்லை.
முதலீடுகளில் குறைவாக இழப்பது முக்கியமானது
முதலீட்டு விருப்பங்களில் ஏற்ற இறக்கங்கள் அல்லது உள்ளார்ந்த அபாயங்கள் மாறுபடுகின்றன. இது அசெட் கிளாஸ்கள் முழுவதிலும் மற்றும் ஒரு அசெட் கிளாஸிற்குள்ளும் உண்மையானது. எடுத்துக்காட்டாக, பங்குகள் பத்திரங்களை விட ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன, மற்றும் ஈக்விட்டிகளில், ஸ்மால் கேப் பங்குகள் அவற்றின் லார்ஜ் கேப் பங்குகளை விட அபாயகரமானவையாகக் கருதப்படுகின்றன. அவற்றின் அபாயம் நமக்கு சாதகமாக இருக்கும்போது, அதாவது நமது முதலீடு லாபமடையும் போது, நாம் கேள்வி கேட்பதில்லை நமது விருப்பம் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அது சாதகமாக இல்லாத போது, நாங்கள் கவலைப்படுகிறோம். இந்தக் கவலையை குறைக்க, எப்போது வெற்றி பெறும் மற்றும் குறைவாக இழக்கும் என்பது தெரிந்த ஒரு முதலீட்டை நாம் தேர்வு செய்வது முக்கியமாகும்.
எடுத்துக்காட்டாக: பின்வரும் பங்குகளில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்? சந்தைகள் உயரும்போது 45% ஆதாயங்களை பெறும் மற்றும் அவை தீவிரமாகக் குறையும்போது 40% வீழ்ச்சியடையும் பங்கு ஏ. இதற்கிடையில், சந்தையின் உயர்வில் 38% அதிகரிக்கும் மற்றும் வீழ்ச்சியடையும்போது 28% வீழ்ச்சியடையும் பங்கு பி. நாம் அனைவரும் 38% வருமானத்தை விட 45% வருமானத்தையே விரும்புவோம் அதேவேளை, பங்கு பி நமது விருப்பமான தேர்வாக இருக்க வேண்டும் ஏனெனில் அதன் வீழ்ச்சி பங்கு ஏ வை விடவும் கணிசமாகக் குறைவானது. எனவே இது மீதமுள்ள சந்தை போல் வீழ்ச்சியடைந்தாலும், இதனால் பங்கு ஏ வை விட சிறந்த முறையில் மூலதனத்தைப் பாதுகாக்க முடியும்.
இந்த உதாரணத்தில் எண்களைப் பயன்படுத்துவோம். நாங்கள் ஒவ்வொரு பங்கிலும் ₹ 10,000 முதலீடு செய்திருந்தால், கொடுக்கப்பட்ட சதவீதங்களின்படி அதிகரித்தல் மற்றும் வீழ்ச்சி சுழற்சிக்கு பிறகு, பங்கு ஏ வில் உள்ள நமது பணம் ரூ 8,700 ஆக இருக்கும், பங்கு பி-யில், அது ரூ 9,936 ஆக வீழ்ச்சியடைந்திருக்கும். குறைவான வீழ்ச்சி காரணமாக, ஸ்டாக் பி-யால் மூலதனத்தை அதிகமாகப் பாதுகாக்க முடிந்தது. எனவே, சந்தைகள் மீண்டும் உயரும்போது, பங்கு பி-இல் முதலீடு செய்யப்பட்ட உங்கள் பணம் பங்கு ஏ-வில் முதலீடு செய்ததை விட அதிகம் வளர வாய்ப்புள்ளது.
வீழ்ச்சிக்கு எதிராக தயார்படுத்திக் கொள்ளுதல்
மேலே உள்ள எடுத்துக்காட்டிலிருந்து, முதலீடு செய்யப்பட்ட பணத்தைப் பாதுகாப்பது அதை வளர்ப்பதை விட மிகவும் முக்கியமானது என்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த அறிவுடன் ஆற்றல் பெற்று, நிதிச் சந்தைகளில் ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சிக்குத் தயாராக இருக்கும் பத்திரங்களைக் கொண்ட போர்ட்ஃபோலியோவைத் தேர்ந்தெடுப்பது வீழ்ச்சியையும் குறைத்து, சந்தைகள் உயரும்போது சிறந்த லாபத்தையும் சம்பாதிக்க உதவும்.
உங்களிடம் தேர்வு செய்ய பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன, இவற்றில்
மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த விருப்பமாகும். அவை உங்கள் போர்ட்ஃபோலியோவைத் தானாகவே பல்வகைப்படுத்துகின்றன, இதன் மூலம் தனிப்பட்ட பங்கு வைத்திருப்பதை விட சிறந்த முறையில் சரிவை எதிர்கொள்ள தயாராகலாம். பல்வேறு மூலோபாயங்களை வழங்கும் மற்றும் பல்வேறு சந்தை பிரிவுகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளின் ஒரு கலவை சிறப்பாக வேலை செய்யலாம். எனவே முன்னேறுங்கள் உங்கள் இழப்புகளைக் குறைத்திடுங்கள்.