பல சொத்து ஒதுக்கீடு நிதிகள்
உங்கள் முதலீடுகள் பாதிக்கும் பல காரணிகளில் இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன - அபாயங்கள் மற்றும் வருமானங்கள். ஒரு சொத்து வகுப்பில் மட்டுமே முதலீடு செய்வது அதிக அபாயங்களை ஏற்படுத்தலாம்; அது குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது? எனவே, உங்கள் அபாயங்களைச் சமாளிக்க உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் பன்முகத்தன்மை இருக்க வேண்டும், அதாவது சொத்து வகுப்புகளில் ஒன்று சரியாகச் செயல்படவில்லை என்றால், நன்றாக செயல்படும் மற்றவர் முதலீடுகள் இருப்பதால், உங்கள் வருமானம் கணிசமாக குறையாது. இந்த அபாயங்கள் மற்றும் வருமானங்களுக்கான போட்டிக்கு இடையில், முக்கியப் பங்கு பங்கு வகிக்கும் ஒரு விஷயம் உங்கள் சொத்து ஒதுக்கீடாகும். பலவீனமான/எதிர்மறையான தொடர்புடைய மற்றும் வெவ்வேறு காலத்தில் செயல்படும் மற்றும் ஒரு தனிநபருக்குக் கண்காணிப்பது கடினமாக இருக்கும் அசெட் கிளாஸ்கள்
#பல்வேறு ஆய்வுகளின்படி, 90% க்கும் மேற்பட்ட போர்ட்ஃபோலியோ வருமானங்கள் சொத்து ஒதுக்கீட்டு முடிவுகளின் அடிப்படையில் அமைகின்றன. எனவே, அசெட் கிளாஸ்கள் மற்றும் சப்-அசெட் கிளாஸ்களில் முதலீடு செய்யப்படுவது மிகவும் முக்கியமானது. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு பல சொத்து ஒதுக்கீட்டு நிதி, அதாவது தங்கம், ஈக்விட்டி, கடன் போன்ற சொத்து வகுப்புகளுக்கு இடையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. விரும்பிய பன்முகத்தன்மையை இது உங்களுக்கு வழங்க முடியும்.
#ஆதாரம்: சொத்து ஒதுக்கீட்டு கொள்கை செயல்திறனின் 40%, 90% அல்லது 100% ஐ விளக்குகிறதா?
சொத்து ஒதுக்கீட்டின் முக்கியத்துவம்
கடந்த பத்தாண்டுகளில், சொத்து வகுப்புகளிடையே பல்வேறு விதமான வருமானங்களை நாங்கள் பார்த்துள்ளோம், அதாவது ஒரு அசெட் கிளாஸ் நன்றாக செயல்படுகிறது என்றால், மற்றொன்று சரியாகச் செயல்படாமல் போகலாம். கடந்த 10 ஆண்டுகளில், தங்கம், ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகள் முறையே 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகளுக்கு நன்றாகச் செயல்பட்டுள்ளன. மாறுபட்ட போக்குகள் இருந்ததோடு மட்டுமல்லாமல், மாறுபாட்டின் அளவு கூட மிகவும் கடுமையானதாக இருந்துள்ளது. எனவே, இந்த மாறுபாட்டைக் கணக்கிட உதவும் பிரதான காரணியாக சொத்து ஒதுக்கீடு அமைகிறது.
சொத்து ஒதுக்கீட்டின் நன்மைகள்:
1. சொத்து ஒதுக்கீடு என்பது போர்ட்ஃபோலியோ வருமானங்களின் முக்கிய ஊக்கியாகும்
2. வெவ்வேறு சொத்து வகுப்புகளில் பலவீனமான அல்லது எதிர்மறையான தொடர்பு உள்ளதால்; சொத்து ஒதுக்கீடு போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலுக்கு உதவுகிறது
பல்வகைப்படுத்தல் காரணமாக ஒட்டுமொத்த அபாயத்தை குறைப்பதன் மூலம் ஒப்பீட்டளவில் அபாயங்களுக்காகச் சிறந்த முறையில் சரிசெய்யப்பட்ட வருமானங்களுக்கு சொத்து ஒதுக்கீடு வழிவகுக்கிறது.
சொத்து ஒதுக்கீட்டை எப்படிச் செய்ய வேண்டும்?
ஒதுக்கீட்டை நீங்களே செய்வதற்குப் பதிலாக, சொத்து ஒதுக்கீட்டு நன்மைகளை வழங்கக்கூடிய ஒற்றை தயாரிப்பைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், அப்படி ஒன்று உள்ளது.
குறைந்தபட்சம் மூன்று அசெட் கிளாஸ்களில் முதலீடு செய்வதன் மூலம் மேலே உள்ள நன்மைகளை அடைய ஒரு பல-சொத்து ஒதுக்கீட்டு நிதி முயற்சிக்கிறது. இது பலவீனமான/எதிர்மறையாகத் தொடர்புடைய சொத்து வகுப்புகளின் கலவையில் முதலீடு செய்கிறது மற்றும் மிகக் குறைந்த அளவிலான ஏற்றத்தாழ்வுகளுடன் ஒப்பீட்டளவில் அபாயத்திற்காக-சரிசெய்யப்பட்ட வருமானத்தை வழங்க முயற்சிக்கிறது. நிதிக்குள் மறுசீரமைப்பு செய்வதன் மூலம் வரிக் குறைப்பையும் பல-சொத்து ஒதுக்கீட்டு நிதி வழங்குகிறது
.
இந்த நிதிகள் அடிப்படையில் மூன்று வழிகளில் இதை அடைகின்றன
கண்ணோட்டத்தின் அடிப்படையிலான சொத்து ஒதுக்கீடு
பார்வை-அடிப்படையிலான அணுகுமுறையில், நிதி மேலாளர் ஒரு குறிப்பிட்ட சொத்து வகுப்பை பார்க்கிறார் மற்றும் அந்த சொத்து வகுப்பின் மீது அதிக முதலீட்டையும் பிறவற்றில் குறைந்த முதலீட்டையும் செய்ய முயற்சிக்கிறார். இருப்பினும், இந்த அணுகுமுறையில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நிதி மேலாளரின் முடிவு சரியாக இருந்தாலும் சில சமயங்களில் அது தவறாகவும் இருக்கலாம் மற்றும் இது ஒரு வகையான இரட்டை அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அவர் அதிக முதலீடு செய்யும் சொத்து வகுப்பின் மீது மட்டுமல்லாமல் குறைவாக முதலீடு செய்வதன் மீதும் கண்ணோட்டம் தவறாக இருக்கக்கூடும், குறைவாக முதலீடு செய்த பிந்தைய சொத்து வகுப்பு நன்றாகச் செயல்படலாம். கண்ணோட்டத்தின் அடிப்படையிலான அணுகுமுறை தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏனெனில் ஒரு அசெட் கிளாஸ் நன்றாக/மோசமாகச் செயல்படுவதைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.
மாதிரி-அடிப்படையிலான சொத்து ஒதுக்கீடு
இரண்டாவது அணுகுமுறை, மாதிரி-அடிப்படையிலான அணுகுமுறை இங்கு ஒரு அளவு அடிப்படையிலான மாதிரியின் மூலம் எந்தச் சொத்து வகுப்பை நன்றாக/மோசமாகச் செயல்படும் என்பது மதிப்பீடு செய்யப்படுகிறது மற்றும் அதன்படி முதலீட்டு முடிவுகளை எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த அணுகுமுறைக்கு கண்ணோட்டத்தின் அடிப்படையிலான அணுகுமுறைக்கு உள்ள பிரச்சனைகள் உள்ளன. இதிலும், ஒரு மாதிரி குறித்து முடிவு செய்ய முடியாத அளவிற்குப் பல காரணிகளால் பாதிப்புகள் ஏற்படலாம்.
தொடர்ச்சியான சொத்து ஒதுக்கீடு
மூன்றாம் அணுகுமுறை, ஒரு நிலையான ஒதுக்கீட்டு அணுகுமுறை ஆகும். இது ஒரு எளிய அணுகுமுறையாக இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். சந்தை கட்டங்களில் சிறந்த ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானங்களைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் வெவ்வேறு சொத்து வகுப்புகளிலும் (பலவீனமான தொடர்புடையது) அர்த்தமுள்ள ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முடிவு-
ஒரு பல-சொத்து ஒதுக்கீட்டு நிதி உங்கள் சொத்து ஒதுக்கீட்டுச் சிக்கல்களுக்கான பதிலாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம், நிதி மூலம் எடுக்கப்படும் அணுகுமுறையும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஒருவர் பல-சொத்து ஒதுக்கீட்டு நிதியில் முதலீடு செய்யலாம், இது நீண்ட கால செல்வ உருவாக்கத்தை அடைவதற்கான நோக்கத்துடன் தொடர்ச்சியான ஒதுக்கீட்டு அணுகுமுறையை ஏற்றுக்கொள்கிறது