வாரத்தின் நிதி சொல்- போர்ட்ஃபோலியோ ரீபேலன்சிங்
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்யும் போது, நீங்கள் விரும்பிய சொத்து ஒதுக்கீட்டில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள். பல்வேறு வகையான சொத்து பிரிவுகள் ஈக்விட்டி, கடன், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பல இருக்கலாம்; மேலும் இவை ஒவ்வொன்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு அளவிலான அபாயங்களைக் கொண்டுள்ளன. உங்கள் சொத்து ஒதுக்கீடு என்பது உங்கள் வருமான எதிர்பார்ப்பு மற்றும் இடர் விருப்பத்தை பொறுத்து, இந்த சொத்துக்கள் ஒவ்வொன்றிலும் அல்லது ஏதேனும் ஒன்றில் நீங்கள் செய்யும் முதலீட்டின் தொகையைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஈக்விட்டி, கடன் மற்றும் தங்கத்திற்கு ஆதரவாக 50:30:20 இன் சொத்து ஒதுக்கீட்டை தேர்வு செய்யலாம். இப்போது, நீங்கள் இந்த சொத்து ஒதுக்கீட்டுடன் தொடங்கலாம், ஆனால் காலப்போக்கில், சந்தை பரிவர்த்தனை காரணமாக உங்கள் முதலீடுகளின் மதிப்பு ஏறும் இறங்கும். இது உங்கள் சொத்து ஒதுக்கீட்டில் 55:20:25 என்ற ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம். போர்ட்ஃபோலியோ ரீபேலன்சிங் என்பது உங்கள் சொத்து ஒதுக்கீட்டில் அசல் 50:30:20க்கு மீண்டும் கொண்டு வருவதற்கான செயல்முறையாகும்.
ரீபேலன்ஸ்டு போர்ட்ஃபோலியோ ஏன் தேவைப்படுகிறது?
ஒரு சொத்து வகைகளில் மட்டுமே முதலீடு செய்வது ஆபத்தானது, ஏனெனில் அது செயல்படவில்லை என்றால், நீங்கள் முதலீடு செய்த பணத்தை இழக்க நேரிடும். வெவ்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்த அபாயங்களைக் குறைக்கலாம். சரியான சொத்து ஒதுக்கீடு உத்தியானது, எந்தச் சொத்து வகையில் உங்கள் கார்பஸ் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்கும்.
ஒவ்வொரு சொத்து வகுப்பும் வித்தியாசமாக செயல்படுவதால், சொத்து ஒதுக்கீடு என்ற கருத்தும் செயல்படுகிறது; அதாவது, அவற்றில் ஒன்று சிறப்பாகச் செயல்படும் போது, மற்றொன்று குறைவாகச் செயல்படலாம் - தங்கம் மற்றும் ஈக்விட்டி போன்று. எனவே, இரண்டிலும் முதலீடு செய்வதனால் உங்கள் போர்ட்ஃபோலியோ பாதிக்கப்படவில்லை என்பதை தெரிந்து நீங்கள் நிம்மதியாக இருக்க உதவும். உங்களின் எதிர்கால வருவாயைத் தீர்மானிப்பதற்கும் ஆபத்தைக் குறைப்பதற்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக இருப்பதோடு, பல்வகைப்படுத்தலுக்கும் சொத்து ஒதுக்கீடு தேவைப்படுகிறது. நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதே உங்கள் நோக்கம் என்றால், இந்த பயணத்தில் சொத்து ஒதுக்கீடு முக்கியமாக இருக்கலாம்.
போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்ய வேண்டிய தேவை
உங்களிடம் ₹ 1,00,000 மற்றும் நீங்கள் ரூ 60,000 ஈக்விட்டி ஃபண்டுகளில் (60%) மற்றும் ₹ 40,000 கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் (40%), உங்கள் இடர் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்துள்ளீர்கள். இப்போது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், 10 ஆண்டுகளில், ஈக்விட்டி ஃபண்டுகளின் மதிப்பு ₹ 62,000 ஆகவும், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு ₹ 45,000 ஆகவும் வளர்ந்துள்ளது. இப்போது தற்போதைய திட்டத்தில், ஈக்விட்டி மற்றும் கடன் ஃபண்ட்களுக்கான ஒதுக்கீடு முறையே 58% மற்றும் 42 % ஆக ஆகிவிட்டது.
எனவே, நீங்கள் கடனில் லாபத்தை பதிவு செய்யலாம் மற்றும் ஈக்விட்டி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம், இதனால் உங்கள் ஒதுக்கீடு 60:40க்கு திரும்பும்.
போர்ட்ஃபோலியோ ரீபேலன்சிங் க்கு நீங்கள் ஒரு டேபை வைத்திருக்க வேண்டும் மற்றும் உங்கள் சொத்து ஒதுக்கீடு உங்கள் ஆரம்ப உத்திக்கு ஏற்ப இணங்குகிறதா என்பதை ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் சரிபார்க்க வேண்டும். ரீபேலன்சிங் உங்கள் இடர் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் அபாயங்களை வைத்திருக்க உதவுகிறது. உங்கள் இடர் விருப்பம் மாறினால், உங்கள் சொத்து ஒதுக்கீடு மாறலாம் மற்றும் நீங்கள் வேறு ரீபேலன்சிங் வழியை பின்பற்ற விரும்பலாம். உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, சொத்து ஒதுக்கீடு நிலையைச் சரிபார்த்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கலாம்.
போர்ட்ஃபோலியோ ரீபேலன்சிங் இன் நிதி தாக்கங்கள்
மேலே உள்ள எடுத்துக்காட்டில், ₹ 1,07,000 என்ற புதிய போர்ட்ஃபோலியோ மதிப்பை ரீபேலன்ஸ் செய்வதற்கு, நீங்கள் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ரூ 2200 ஐ மீட்டெடுத்து, ஒதுக்கீடு மீண்டும் 60:40 க்கு சரி செய்யப்படுவதை உறுதி செய்ய அவற்றை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த ரிடெம்ப்ஷனில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டணங்கள் கொண்டிருக்கலாம்-
- எக்சிட் லோடு: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் ரெடீம் செய்தால், உங்கள் மீட்பின் மீது ஒரு எக்சிட் லோடு விதிக்கப்படலாம். இது ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டிற்க்கு மாறுபடும்.
- கேப்பிட்டல் கெயின் டேக்ஸ்: மீண்டும், உங்கள் முதலீட்டு காலத்தைப் பொறுத்து, உங்கள் முதலீட்டில் நீங்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு ஏற்ப குறுகிய கால மூலதன லாப வரி அல்லது நீண்ட கால மூலதன லாப வரி விதிக்கப்படலாம்
உங்கள் போர்ட்ஃபோலியோவில் நீங்கள் சரிசெய்யும் மாற்றங்கள் தகவலறிந்த முடிவுகளாக இருக்க வேண்டும், இந்த கட்டணங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ரெடீம்கள் காரணமாக ஏற்படக்கூடிய நிதி தாக்கங்களைக் குறைக்க முயற்சிக்கவும். நீங்கள் வேறுபட்டவர் என்பதால் உங்கள் சொத்து ஒதுக்கீட்டு முடிவுகளும் அவ்வாறானதாகத்தான் இருக்கும். வேறு ஒருவரின் உத்தியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நீங்கள் சொந்தமாகப் பெறுவது சிறந்ததாக இருக்கலாம்.