இந்த வாரத்தின் ஃபைனான்ஷியல் டேர்ம்- ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள்
ரிட்டையர்மென்ட் என்பது நீங்கள் எதிர்பார்த்து திட்டமிடும் வாழ்க்கையின் ஒரு கட்டமாகும். எனவே, இது பெரும்பாலும் அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான நீண்ட கால இலக்குகளில் ஒன்றாகும். இதற்காக ரிட்டையர்மென்ட் வயதிற்கு முன்பிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும், ரிட்டையர்மென்ட் பெறும் வரை அந்தப் பணத்தை ரெடீம் செய்யவோ அல்லது வித்டிராவல் செய்யவோ கூடாது. நீங்கள் ரிட்டையர்மென்ட் பெற்ற பிறகு இந்த முதலீடு உங்களுக்கு ஒரு வருமான ஆதாரமாக மாறலாம். மேலும், உங்களின் ரிஸ்க் அப்பிட்டைட் பொறுத்து, ஈக்விட்டி மற்றும் டெபிட்டுக்கான அலோகேஷன் உங்களுக்கு வயதாகும்போது மாறலாம்.. உங்கள் ரிட்டையர்மென்ட் இலக்குகளை அடைய உதவுவதற்கு, ரிட்டையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன.
ரிட்டையர்மென்ட் ஃபண்டுகள் என்பது சொல்யூஷன் ஓரியன்டேட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும், இது முதலீட்டாளர்கள் தங்கள் ரிட்டையர்மென்ட் இலக்குகளுக்காக குறிப்பாக முதலீடு செய்ய உதவுகிறது. இவை 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்துடன் அல்லது ரிட்டையர்மென்ட் வயது வரை லாக்-இன் விருப்பத்துடன் வருகிறது (எது முந்தையதோ அது). உங்கள் ரிட்டையர்மென்ட் வயதிற்கு முன்பே நீங்கள் ரெடீம் செய்யலாம், ஆனால் நீங்கள் ரிட்டையர்மென்டுக்கான கார்பஸை உருவாக்க விரும்பினால், முதலீடு செய்வதே சிறப்பாக இருக்கும். உங்கள் ரிட்டையர்மென்டுக்கு பிறகு; ஒரு ரிட்டையர்மென்ட் ஃபண்டானது
சிஸ்டமேடிக் வித்டிராவல் திட்டத்தின்(எஸ்டபிள்யூபி) வடிவத்தில் வழக்கமான மாத வருமானத்தை உங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஃபண்டிலிருந்து ரெடெம்ப்ஷன் பெற ஒரு லம்ப் சம்-ஆக அல்லது மேலே குறிப்பிட்டுள்ளபடி எஸ்டபிள்யூபி முறையில் செய்யலாம். ரிட்டையர்மென்ட் ஃபண்ட் போன்ற முதலீடு, ரிட்டையர்மென்டுக்கு பிந்தைய உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகளைக் கவனித்துக்கொள்ள உதவுகிறது. இந்த ஃபண்டுகள் ஈக்விட்டி, ஈக்விட்டி தொடர்பான மற்றும் ஃபிக்ஸ்டு இன்கம் செக்யூரிட்டிகளில் அவற்றின் இன்வெஸ்ட்மென்ட் ஸ்ட்ரேட்டர்ஜி அடிப்படையில் முதலீடு செய்கின்றன.
இரண்டு வகையான ஓய்வூதிய நிதிகள் இருக்கலாம்-
- ஈக்விட்டி-சார்ந்தவை
- கடன்-சார்ந்தவை
உங்கள் ரிஸ்க் அப்பிட்டைட் மற்றும் முதலீட்டு நோக்கத்தின் அடிப்படையில், உங்கள் தேவைக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
ஓய்வூதிய மியூச்சுவல் ஃபண்டுகளின் நன்மைகள்
- ஓய்வூதியத்திற்குப் பிறகு வழக்கமான வருமான வரம்பை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் உங்கள் எதிர்காலத்தை திட்டமிட அவர்கள் உங்களை அனுமதிக்கின்றனர். (எஸ்டபிள்யூஐ-ஐ பயன்படுத்தி, ஓய்வூதியத்திற்கு பிறகு அவர்கள் உங்களுக்கு பணம் வழங்க முடியும்).
- அவை குறைந்தபட்சம் 5 வருடங்களோ அல்லது ரிட்டையர்மென்ட் வயது வரையிலோ லாக்-இன் காலத்துடன் வருகிறது, அது முதலீட்டின் கட்டுப்பாடு பராமரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
ரிட்டையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் யார் முதலீடு செய்யலாம்?
நீண்ட கால நோக்கத்திற்காக கட்டுப்பாடு முதலீட்டாளர்களாக இருக்க விரும்பும் முதலீட்டாளர்களைத் தவிர, குறைந்த பட்சம் 5 வருடங்கள் அல்லது ரிட்டையர்மென்ட் வயது வரை பணத்தைப் லாக் இன் செய்து வைப்பதில் பிரச்சினையில்லாமல் இருப்பவர்கள், ரிட்டையர்மென்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
ரிட்டையர்மென்ட் போன்ற நீண்ட கால நோக்கத்திற்காக முதலீடு செய்ய விரும்பும் ஆனால் சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்தால் குழப்பமடைந்து தங்கள் முதலீடுகளை பாதியிலேயே ரெடீம் செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்காகவும் இந்த ஃபண்டுகள் செயல்பட முடியும். நீண்ட கால முதலீட்டிற்கான இலக்கு என்பதால், காம்பவுண்டிங் சக்தியின் பலன்களைப் பெறவும் இது உதவும். அதே சமயம், ரூபாய் மதிப்பு சராசரியானது, சந்தை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களை வாங்குவதன் மூலமும், அதிகமாக இருக்கும்போது குறைவாக வாங்குவதன் மூலமும் சந்தை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க உதவும்.
ரிட்டையர்மென்ட் ஃபண்டுகளின் வரிவிதிப்பு
திட்டத்தின் ஓரியண்டேஷனைப் பொறுத்து, இது கேபிடல் கெயின் வரியை கணக்கிடும் நோக்கத்திற்காக ஈக்விட்டி அல்லது
ஈக்விட்டி திட்டம் ஐ தவிர வேறு ஒன்றாக வகைப்படுத்தப்படலாம்.
ஈக்விட்டி-ஓரியண்டட் திட்டங்களுக்கு-
குறுகிய கால கேப்பிட்டல் கெயின் (எஸ்டிஜிசி) வரி- 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்கும் கேப்பிட்டல் கெயின்களை எஸ்டிஜிசி ஆகக் கருதப்படுகின்றன, இது தற்போது 15% வரி விதிக்கப்படுகிறது.
நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் (எல்டிசிஜி) வரி- 12 மாதங்களுக்கும் மேலான முதலீட்டு வரம்பிற்கு, கேப்பிட்டல் கெயின்கள் எல்டிசிஜி ஆகக் கருதப்படுகின்றன, உங்கள் கேபிடல் கெயின் ₹. 1 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் 10% வரி விதிக்கப்படும். இந்த விதி அடிப்படையில் 31 ஜனவரி ’18 க்கு முன் செய்யப்பட்ட அனைத்து லாபங்களுக்கும் எந்த வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஈக்விட்டி-ஓரியண்டட் திட்டங்களை தவிர மற்றவைக்கு-
குறுகிய கால கேபிடல் கேன்ஸ் (எஸ்டிசிஜி) வரி- உங்கள் ஹோல்டிங் காலம் 36 மாதங்களுக்கு மேல் இல்லை என்றால், கேபிடல் கெயின்களுக்கு எஸ்டிசிஜி ஆகக் கருதப்படும், இது தற்போது முதலீட்டாளருக்கு பொருந்தக்கூடிய ஸ்லாப் வரி விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.
நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் (எல்டிசிஜி) வரி- உங்கள் ஹோல்டிங் காலம் 36 மாதங்களுக்கு மேல் இருந்தது என்றால், கேப்பிட்டல் கெயின்களை எல்டிசிஜி ஆகக் கருதப்படுகின்றன, இது தற்போது குறியீட்டுடன் 20% வரி விதிக்கப்படுகிறது (ரெசிடெண்ட் முதலீட்டாளர்களுக்கு).