உலகளாவிய சந்தைகள் விரைவில் ரெக்கவர் ஆகுமா? 2008 மந்தநிலையிலிருந்து முதலீட்டாளர்களுக்கான முக்கிய கற்றல்.
இந்தியாவும் உலகமும் உலகளாவிய சந்தை வீழ்ச்சியை அறியாதவை அல்ல. இதற்கு முன் ஏற்கனவே நடந்தது 2008 மந்தநிலை ஒரு தொடர்புடைய உதாரணம். அன்றைய காரணங்கள் நாம் இப்போது எதிர்நோக்குவதை விட வித்தியாசமாக இருந்தாலும், முடிவுகள் முற்றிலும் சூழலுக்கு அப்பாற்பட்டு இல்லை.
ஐஎம்எஃப் (சர்வதேச நாணய நிதியம்) கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக உலகளாவிய மந்தநிலையை முன்னறிவித்ததிலிருந்து, கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த உலகளாவிய நிதிச் சரிவு எப்போது முடிவுக்கு வரும் என்பதை உலகம் அறிய விரும்புகிறது.
ஆனால், உலகளாவிய சந்தை ரெக்கவரியை புரிந்து கொள்ள, சில காரணிகளைப் புரிந்துகொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.
தற்போதைய நிலை என்ன?
ஜூன் 2020தேதியிட்ட ஐஎம்எஃப்-இன் வேர்ல்டு எக்கனாமிக் அவுட்லுக் புதுப்பிப்பு, 2020ல் இந்தியப் பொருளாதாரத்தில் 4.5% ஷார்ப் கான்டராக்ஷனை கணித்துள்ளது. இதற்குக் காரணம், இதுவரை கண்டிராத கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆகும், இது அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் கிட்டத்தட்ட முடக்கியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், நாடு மந்தநிலையில் இருப்பதாக பேசப்படுகிறது.
மந்தநிலையில் என்ன நடக்கும்?
மந்தநிலையின் போது, பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) சரிவு, சராசரி வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்கிறதா?
சர்ச்சைக்குரிய பிரச்சினையை பார்க்கையில், பொருளாதார நடவடிக்கைகளில் இவ்வளவு நீடித்த நீண்ட கால வீழ்ச்சியை இந்தியா இதுவரை சந்தித்ததில்லை. நாடு முதன்முறையாக பொருளாதார மந்தநிலையை எதிர்நோக்கக்கூடும்.(நேஷனல் ஹெரால்டு இந்தியா, ஜூன் 21, 2020 அன்று வெளியிட்ட கருத்து)
எவ்வாறாயினும், 2008 மந்தநிலையானது நாடு சந்தித்த முதல் நெருக்கடியாகும், இதை இந்தியா திக்குமுக்காடி ஒரு வழியாக கடந்து வந்தது. வளர்ந்து வரும் உலகில் உள்ள பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாடு சிறந்தது.
2008 மந்தநிலையில் இருந்து இந்தியா மீண்டு வருவது நம்பிக்கையை அளித்தாலும், கோவிட்-19 பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான கடுமையான காத்திருப்பு இன்னும் நாடு முழுவதும் நிலவுகிறது.
தற்போதைய பொருளாதார நிலையில் இருந்து எப்போது நாம் மீள்வோம்? அதை நாம் காணலாம்.
ஒரு மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்?
கடந்த 14 மந்தநிலைகளைப் பார்த்தால், அவை சராசரியாக 1.1 ஆண்டுகள் நீடித்தன. அதிகபட்சமாக சுமார் 3.5 ஆண்டுகளும் (1929 இன் பெரும் மந்தநிலை) மற்றும் குறைந்தபட்சமாக ஆறு மாதங்களும் (1980 இன் மந்தநிலை) நீடித்தன.
உலக சந்தைகள் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வருமா?
இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சற்று கடினமானதாக இருந்தாலும், ஒன்று நிச்சயம் - பொருளாதார ரெக்கவரி என்பது ஒரே இரவில் நடந்துவிடாது.
மந்தநிலைகள் பொதுவாக விரிவாக்க காலங்களால் தொடர்ந்து வந்தன. 1980 மந்தநிலைக்குப் பிறகு சுமார் ஒரு வருடமும் மற்றும்1991 மந்தநிலைக்குப் பிறகு ஏறக்குறைய பத்து ஆண்டுகள் வரை, இந்த விரிவாக்க காலங்கள் பல ஆண்டுகளாக வேறுபடுகின்றன. சராசரியாக, ஒரு விரிவாக்க காலம் சுமார் நான்கு ஆண்டுகள் நீடிக்கும். முன்கணிப்புக்கு கடந்த கால நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டாலும், அவை எப்போதும் வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு துல்லியமான முன்கணிப்பாக இருக்க முடியாது.
உலகளாவிய மந்தநிலையிலிருந்து ரெக்கவர் ஆவதற்கு எடுக்கும் நேரம், ரெக்கவரி முறையின் வகையைப் பொறுத்தது
ரெக்கவரி வகைகள்
உலகப் பொருளாதாரம் எப்படி ரெக்கவரி ஆகிறது என்பதைப் பொறுத்து, மந்தநிலையிலிருந்து ரெக்கவரி ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக, இது பின்வரும் வளர்ச்சி வளைவுகளில் ஒன்றை பின்பற்றுகிறது:
-
வி-வடிவம்:இது விரைவானது மற்றும் சிறப்பானது. இந்த வடிவத்தில், பொருளாதாரத்தில் விரைவான சரிவு உள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு விரைவான ரெக்கவரி-யும் நிகழ்கிறது.
-
யு-வடிவம்:இங்கே, பொருளாதாரம் மந்தநிலையில் கூர்மையான வீழ்ச்சியை அனுபவிக்கிறது, ஆனால் ரெக்கவரி மெதுவாக நிகழ்கிறது.
-
டபிள்யூ-வடிவம்:இந்த விஷயத்தில், பொருளாதாரம் முழுமையாக ரெக்கவர் ஆவதற்கு முன்னர் வி-வடிவ ரெக்கவரிக்கு உள்ளாகி வருவது போல் தெரிகிறது.
-
எல்-வடிவம்:இது வளர்ச்சியில் வீழ்ச்சியை உள்ளடக்கியது, அதைத் தொடர்ந்து மிக மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
-
ஸ்வூஷ்-வடிவம்:இங்கே, ஆரம்ப மந்தநிலையைத் செங்குத்தான சரிவு ஏற்படுகிறது, ஆனால் நிலையான இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
2008 மந்தநிலை பற்றிய ஆய்வு முதலீட்டாளர்களுக்கு ஏன் முக்கியமானது?
2008 நிதி நெருக்கடி பங்குச் சந்தைகளை மட்டுமன்றி, உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாக சீர்குலைத்தது. கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவும் முழு உலகமும் இன்னுமொரு பொருளாதார நெருக்கடியை உற்று நோக்கலாம். எவ்வாறாயினும், 2007-2008 நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தற்போதைய நெருக்கடியைக் கையாள நமக்கு உதவுகின்றன.
2008 பொருளாதார நெருக்கடியிலிருந்து, நாம் கற்றுக்கொண்ட ஐந்து பாடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பாடம் 1: உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துதல்
பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் பங்குகளை வாங்குவதன் மூலம் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்துவது ஆபத்தை குறைக்க உதவும். ஒருவர் தங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த முதலீட்டு விருப்பமாக மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம்.
பாடம் 2: சிஸ்டமேடிக் முதலீடு திட்டத்தின் மூலம் முதலீடு செய்தல் (எஸ்ஐபி)
2008 பொருளாதார நெருக்கடியின் போது முதலீட்டாளர்கள் கற்றுக்கொண்ட ஒரு முக்கிய பாடம், முதலீட்டு இழப்புகளை குறைப்பதில் சிஸ்டமேட்டிக் முதலீடுகள் எவ்வாறு உதவிகரமாக இருந்தன என்பதுதான். ஏனெனில், ஒரு சிஸ்டமேட்டிக் முதலீட்டு திட்டம்(எஸ்ஐபி) பங்குச் சந்தை சரிவுகளில் இருந்து முதலீடுகள் மீதான எதிர்மறை தாக்கத்தை குறைக்க ரூபாய் மதிப்பின் சராசரி கொள்கையை பயன்படுத்துகிறது.
பாடம் 3:பொறுமையாக இருப்பது
2008 பொருளாதார நெருக்கடி பங்குச் சந்தையில் பெரும் விற்பனை விலையில் சரிவை ஏற்படுத்தியது. இது பெரிய அளவிலான முதலீட்டாளர்களுக்கு ஜீரணிக்க முடியாத அளவிலான இழப்புகளை ஏற்படுத்தியது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, ஒருவர் தங்கள் முதலீடுகளை விற்பதற்கான அழுத்தத்தை வழங்குவதற்கு பதிலாக பொறுமையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் முதலீடுகள் மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.
பாடம் 4: ஈக்விட்டி சந்தையின் கடந்த காலத்தை பார்ப்பது
பல அசெட் வகைகளை உள்ளடக்கிய முதலீட்டு போர்ட்ஃபோலியோ நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம் ஈக்விட்டிகள் முதலீட்டில் நல்ல வருமானத்தை அளிக்கும் மற்றும் பிற வழிகளும் உள்ளன. பத்திரங்கள், கடன் அம்சங்கள், பிற அரசுப் பத்திரங்கள் மற்றும் தங்கத்தை ஒருவர் தேர்வு செய்யலாம்.
பாடம் 5: தயாராகுதல்
2007-2008 காலத்தில், பல குறுகிய கால முதலீட்டாளர்கள் பின்வாங்க போதுமான எமர்ஜென்சி ஃபண்ட் இல்லாத காரணத்தினால் ஒரு மிகப்பெரிய தவறைச் செய்தனர். மேலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில் தற்போதைய வேலைவாய்ப்பு விகிதம் பாதிக்கப்படுகிறது. தற்போது உலகம் எதிர்கொள்ளும் கடினமான காலகட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு எமர்ஜென்சி ஃபண்டுகள் உதவுகின்றன.
உலகச் சந்தைகள் எப்போது மீண்டும் எழுச்சி பெறுவதைப் பார்க்கலாம் என்று சொல்ல முடியாது. கோவிட்-19 இன் தாக்கத்தால் நிதி ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். 2007-2008 மந்தநிலையின் கற்றல்களுடன் பாதுகாப்பாக, நாளைய தினத்திற்கு சிறப்பாகத் தயாராக இருப்பதுதான் இப்போது நாம் செய்யக்கூடியது.
குறிப்புகள் :
https://www.imf.org/en/Publications/WEO/Issues/2020/01/20/weo-update-january2020
https://timesofindia.indiatimes.com/business/india-business/gdp-growth-falls-to-5-8-in-january-march-quarter-slowest-in-five-years/articleshow/69598816.cms
https://www.forbes.com/sites/mikepatton/2020/04/30/what-the-past-90-years-has-taught-us-about-recessions-and-stock-behavior/#10328ed92ddf
https://www.nationalheraldindia.com/opinion/economists-now-say-future-bleaker-than-ever
https://economictimes.indiatimes.com/opinion/et-commentary/2008-crisis-a-wake-up-call-for-india/articleshow/6000712.cms
https://www.ig.com/au/trading-strategies/what-is-an-economic-recovery-and-what-are-the-types-200612#types-of-recession-and-economic-recovery
https://www.imf.org/en/Publications/WEO/Issues/2020/06/24/WEOUpdateJune2020
https://www.thehindu.com/business/Economy/imf-projects-sharp-contraction-of-45-in-indian-economy-in-2020/article31907715.ece
இதில் உள்ள கருத்துக்களை, முதலீடு அல்லது வட்டியை வாங்க அல்லது விற்க ஒரு ஆலோசனையாகவோ அல்லது பரிந்துரையாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. பல்வகைப்படுத்தல் முதலீட்டு வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது மற்றும் இழப்பின் அபாயத்தை அகற்றாது. இதை எழுதும் காலகட்டத்தில் அவை நம்பகமானதாகக் கருதப்படுகின்றன, அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை மற்றும் துல்லியம் குறித்து உத்தரவாதம் இல்லை. அவை உங்களுக்கு தெரிவிப்பு அல்லது அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம். சந்தை நிலவரங்கள் மற்றும் வரிவிதிப்பு உடன்படிக்கைகளுக்கு ஏற்ப முதலீடுகளின் மதிப்பும் அவற்றிலிருந்து வரும் வருமானமும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்பதையும் முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த முழுத் தொகையையும் திரும்பப் பெறாமல் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த கால செயல்திறன் எதிர்காலத்தில் பயன்படலாம் அல்லது பயன்படாலும் போகலாம். விவரிக்கப்பட்டுள்ள கண்ணோட்டங்கள் மற்றும் உத்திகள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்காது. மேலும், முதலீடுகளானது முதலீட்டு நோக்கத்தை அடைவதையே நோக்கமாக இருந்தாலும், அந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இருக்க முடியாது. முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன், தங்கள் ரிஸ்க் அப்பிட்டைட் ஐ தீர்மானிக்க தங்கள் முதலீட்டு ஆலோசகர்களையும் மற்றும் வரி ஆலோசகரையும் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சந்தைப் போக்குகளை விளக்க தரவு/புள்ளிவிவரங்கள்/கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, அது எந்தவித ஆராய்ச்சி அறிக்கையாகவும்/ஆராய்ச்சிப் பரிந்துரையாகவும் கருதப்படக்கூடாது.