வாரத்தின் ஃபைனான்ஷியல் டேர்ம்- மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும், இது முதன்மையாக மிட்-கேப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கிறது. செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (எஸ்இபிஐ) பல்வேறு நிறுவனங்களின் சந்தை மூலதனமயமாக்கலின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தியுள்ளது, இது ஒரு நிறுவனத்தின் நிலுவையிலுள்ள அனைத்து பங்குகளின் சந்தை மதிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் ஒரு பங்கு ₹ 25 க்கு விற்பனை ஆகும் நிலுவையிலுள்ள 1,00,000 பங்குகள் இருந்தால், நிறுவனத்தின் மொத்தச் சந்தை முதலீடு ரூ 25,00,000 ஆக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டின் கண்ணோட்டத்தில் இருந்து, நிறுவனங்களைக் கீழே காண்பிக்கப்பட்டுள்ளபடி எஸ்இபிஐ வகைப்படுத்தியுள்ளது-
மிட்-கேப் நிதியின் பண்புகள்
மிட்-கேப் நிறுவனங்கள் பொதுவாக ஸ்மால்-கேப் நிறுவனங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை மற்றும் லார்ஜ் கேப் நிறுவனங்களாக மாறக்கூடியவை. மிட்-கேப் நிதிகள் குறைந்தபட்சம் 65% சொத்துக்களை மிட்-கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. எந்தவொரு நிறுவனத்தின் வளர்ச்சி கட்டத்தின் போதும், சந்தை நிலைமைகளைப் பொறுத்து, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் பெரிய அளவிலான நிறுவனங்களை விட ஒப்பீட்டளவில் விரைவாக வளர்ச்சியடையலாம். இந்த வளர்ச்சியையே மிட்-கேப் நிதிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. சந்தை சரிசெய்யப்படும்போது, லார்ஜ்-கேப் நிதிகளுடன் ஒப்பிடுகையில், மிட்-கேப் நிதிகள் மேலும் பாதிக்கப்படலாம்.
மிட்-கேப் நிதிகளின் நிதி மேலாளர்கள் நிறுவனத்தின் மதிப்புகள், சாத்தியம் மற்றும் மூலோபாய முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் வளர்ச்சி திறன் கொண்ட மிட்-கேப் நிறுவனங்களை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். நன்றாக செயல்படும் மற்றும் கேரக்டரைக் காண்பிக்கும் மேலும் மேலும் வளர்வதற்கான திறனையும் கொண்டுள்ள ஒரு பங்கில் முதலீடு செய்வதே இதன் உள்ளடக்கமாகும்.
மிட்-கேப் நிதியின் முக்கியப் பண்புகள்-
- லார்ஜ்-கேப் நிதிகளை விட அவை ஒப்பீட்டளவில் சிறந்த வருமானத்தை வழங்குவதற்கான திறனைக் கொண்டிருக்கலாம்
- அவை லார்ஜ்-கேப் நிதிகளை விட அபாயகரமானவை மற்றும் அதிகமான ஏற்றத்தாழ்வுகளை உடையவை
- நீண்ட கால முதலீடுகளுக்கு பொருத்தமானவை மற்றும் குறுகிய-காலத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டவையாக இருக்கலாம்
மிட்-கேப் நிதிகளில் யார் முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு மிட்-கேப் நிதியில் முதலீடு செய்வதை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன-
:;
- நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பினால். மிட்-கேப் நிதி முதலீடுகளுக்குப் பொறுமை தேவை, ஏனெனில் மிட்-கேப் நிறுவனங்கள் வளர்வதற்கு நேரம் எடுத்துக்கொள்கின்றன. இது நீங்கள் செய்யும் ஒரு மூலோபாயத் தேர்வாக இருக்க வேண்டும். எனவே, அவை வாழ்க்கை இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமானவை, எடுத்துக்காட்டாக- ஓய்வூதியம், குழந்தையின் திருமணம் போன்றவை. ஒரு மிட்-கேப் நிதியில் நீங்கள் 5-10 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யலாம்.
- உங்களுக்கு ஏற்றத்தாழ்வு அபாயத்தைச் சகிப்பதற்கான திறன் இருந்தால், மிட்-கேப் நிதிகள் நீண்ட காலத்திற்குள் உங்கள் கார்பஸை வளர்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன; ஆனால் அவை லார்ஜ்-கேப் நிதிகளை விட அதிகமான அபாயங்களுடன் வருகின்றன.
முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் செய்யாவிட்டால், மிட்-கேப் நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன்னர் சிறிது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
மிட்-கேப் நிதிகளுக்கான வரிவிதிப்பு
வேறு எந்த மியூச்சுவல் ஃபண்டையும் போலவே, அவற்றிலிருந்து அடையப்பட்ட மூலதன லாபங்கள் வரிக்கு உட்பட்டவை. மிட்-கேப் நிதிகள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும், அதனால் அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகின்றன-
குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (எஸ்டிசிஜி) வரி- கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு யூனிட்களை முதலீட்டாளர் வைத்திருந்தால், அத்தகைய ஆதாயத்திற்கு 15% வரி விதிக்கப்படும்.
நீண்ட-கால மூலதன ஆதாயங்கள் (எல்டிசிஜி) வரி- பெறப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்கும் மேலாக முதலீட்டாளர் யூனிட்டுகளை வைத்திருந்தால், அத்தகைய லாபம் 10% வரிக்கு உட்பட்டது. ₹ 1 லட்சம் வரையிலான கிராண்ட் ஃபாதரிங் ஆஃப் காஸ்ட் மற்றும் த்ரெஷ்ஹோல்ட் வரம்பின் கூடுதல் நன்மை உள்ளது.
மேலும், ஈக்விட்டி ஓரியண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் எஸ்டிடி-க்கு உட்பட்டவை (பத்திரங்கள் பரிவர்த்தனை வரி).