பிஇ விகிதம் என்றால் என்ன? பிஇ விகிதத்தின் பொருள், விளக்கம் மற்றும் முக்கியத்துவம்
ஒரு எளிய எடுத்துக்காட்டுடன் P/E விகிதத்தின் கருத்தைப் புரிந்துகொள்வோம். கருத்தளவில், நீங்கள் ஷாப்பிங் செய்யச் செல்கிறீர்கள், மாம்பழங்களை வாங்க விரும்புகிறீர்கள், உங்கள் முன் பின்வரும் விருப்பங்கள் உள்ளன-
கடை B: ஒரு கிலோவிற்கு ரூ 550, மிகவும் ஜூசி மற்றும் ஃப்ரெஷ்
இது P/E விகிதத்துடன் ஒத்ததாக இருக்கிறது. விவரமாகப் புரிந்துகொள்வோம்.
P/E விகிதம் என்றால் என்ன?
நேரடிப் பங்குகளில் முதலீடு செய்யும்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்த P/E விகிதம் ஒரு முதலீட்டாளர் பங்கின் வருமானத்தில் ரூ 1 ஐ சேகரிப்பதற்குச் செலுத்தத் தயாராக இருக்கும் தொகையைக் குறிக்கிறது.
இபிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம். நிதி எண்களுடன் ஒரு நிறுவனத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்-
மேலே உள்ள எடுத்துக்காட்டில், இபிஎஸ் ₹ 5,60,000/28,000= ₹ 20 ஆகும். இதன் பொருள் இந்த நிறுவனத்திற்கு, ஒவ்வொரு பங்கும் ₹ 20 சம்பாதிக்கிறது.
இப்போது, இந்த நிறுவனத்தின் பங்கின் சந்தை விலை ஒரு பங்கிற்கு ₹ 800 என்று வைத்துக் கொள்வோம்.
எனவே, P/E விகிதம் ₹ 800/ ₹ 20 = 40 ஆகும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு பங்கும் சம்பாதிப்பதை விட 40 மடங்கு பணம் செலுத்தத் தயாராக உள்ளார், அல்லது நிறுவனத்தின் வருமானத்தில் ரீ 1 சம்பாதிக்க, ஒரு முதலீட்டாளர் ₹ 40 செலுத்தத் தயாராக உள்ளார்.
P/E விகிதத்தை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறோம்?
40 எனும் P/E விகிதம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். இது நல்லதா, அல்லது மோசமானதா? தனிமைப்படுத்திப் பார்த்தால், மாம்பழங்களின் எடுத்துக்காட்டுகளில் P/E விகிதம் என்பது அதிகமாக இல்லை. ஏனெனில் மாம்பழங்களுடன் வழங்கப்படும் மதிப்பைப் போலவே, 40 எனும் மதிப்பு நமக்கு நல்லதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை போட்டி நிறுவனம் B அல்லது தொழிற்துறையின் மற்றொரு P/E விகிதத்தின் குறிப்புடன் மட்டுமே இதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
அதே எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம்-
இப்போது, P/E விகிதம் என்றால் என்ன என்பது புரியத் தொடங்குகிறது. நிறுவனம் A இன் P/E விகிதம் நிறுவனம் B மற்றும் தொழில்துறையின் P/E விகிதத்தை விட அதிகமாக உள்ளது என்பதை நாம் பார்க்கிறோம், மற்றும் நிறுவனம் B இன் P/E விகிதம் தொழில்துறை P/E ஐ விடக் குறைவாக உள்ளது. நினைவில் கொள்ளுங்கள், நிறுவனம் A ஒரு ஆடை-உற்பத்தி நிறுவனமாக இருந்தால், ஒப்பீட்டிற்காக கருதப்படும் நிறுவனம் B அதே டொமைனில் இருக்க வேண்டும்; இல்லையெனில், ஒப்பீடு அர்த்தமுள்ளதாக இருக்காது.
அதாவது நிறுவனம் B நிறுவனம் A ஐ விட மலிவானது, அதனால் அதில் முதலீடு செய்யப்பட வேண்டுமா? இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதாவது, ஒரு முதலீட்டாளர் A நிறுவனத்தின் பங்குகளுக்கு மேலும் பணம் முதலீடு செய்யத் தயாராக இருந்து B நிறுவனத்தின் பங்குகளில் குறைவாக முதலீடு செய்ய நினைத்தால், அது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு அல்லது அனைத்து காரணங்களுக்காகவும் இருக்கலாம்.
எனவே, எந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவது என்பதை முடிவு செய்வதற்கான ஒரே காரணம் P/E விகிதமாக இருந்தால், தெளிவாக, B நிறுவனத்தின் பங்கு A நிறுவனத்தின் பங்கை விட மலிவானது. ஆனால் அப்படி இல்லை. எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்போது பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன, மேலும் P/E விகிதம் என்பது கருதப்படும் காரணிகளில் ஒன்றாகும். அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில் P/E விகிதத்தின் முக்கியத்துவம் என்ன?
முன்பே கூறியது போல், நேரடி ஈக்விட்டியில் முதலீடு செய்யும் போது P/E விகிதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் P/E முக்கியமில்லை என்று அர்த்தமல்ல. ஈக்விட்டி திட்டம் என்பது பங்குகளின் தொகுப்பாகும், எனவே, திட்டத்தின் P/E என்பது திட்டத்தில் உள்ள பங்குகளின் பங்குகளின் சராசரி P/E ஆகும்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் அதிக P/E என்பது நிதி மேலாளருக்கு அதிக வளர்ச்சி-சார்ந்த அணுகுமுறை உள்ளது என்பதைக் குறிக்கலாம், சில சந்தர்ப்பங்களில் அதிக P/E விகிதம் என்பது அளவுக்கதிகமான மதிப்பீட்டையும் குறிப்பிடலாம். ஒரு குறைந்த P/E என்பது மதிப்பு அடிப்படையிலான அணுகுமுறையைக் குறிக்கலாம். குறைந்த P/E திட்டங்கள் நீண்ட கால முதலீடு மற்றும் மதிப்பைக் குறிக்கோளாகக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கலாம்.
ஆனால் மீண்டும், எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும்போது ஒரு திட்டத்தின் P/E விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இறுதியில் விலை குறைவாக இருக்கும், ஆனால் ருசியே இல்லாத மாம்பழங்களை நீங்கள் வாங்கிச் செல்ல விரும்ப மாட்டீர்கள் அல்லவா! P/E விகிதத்துடன் இணைக்கப்பட்ட மதிப்பு பெரும்பாலும் ஒப்பீட்டளவிலானது மற்றும் அதேபோல் கருதப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.