மியூச்சுவல் ஃபண்டில் ஸ்டாண்டர்டு டிவியேஷனை புரிந்துகொள்ளுதல் - ஃபார்முலா & ரிட்டர்ன்ஸ்
வாழ்க்கையில், நீங்கள் மேற்கொள்ளும் எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. உதாரணமாக, நீங்கள் பங்கீ-ஜம்பிங் செய்ய தயாராக இருந்தால், நீங்கள் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிக ரிஸ்க் அப்பிட்டைட்-ஐ கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. ஆனால் நீங்கள் அபாயங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதால், தீவிரமான சூழ்நிலைகளையும் அவை எவ்வளவு எண்ணிக்கையில் நிகழலாம் என்பதை நீங்கள் கணக்கிட்டிருக்க மாட்டீர்கள் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பதை உறுதிசெய்ய, ஏதேனும் விபத்துகள் நடந்துள்ளனவா அல்லது எத்தனை முறை குதித்துள்ளவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அதிக அபாயத்தை மேற்கொள்ளுபவராக இருந்தாலும், நீங்கள் மேற்கொள்ளும் அபாயத்தின் அளவை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நிதி முதலீடுகளில், ஒரு குறிப்பிட்ட வாகனத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்கும் காரணியாக இந்த ஆபத்தின் அளவு அல்லது வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். வருமானத்தில் இந்த ஏற்ற இறக்கம் கணித ரீதியாக ஸ்டாண்டர்டு டீவியேஷன் (எஸ்டி) மூலம் கணக்கிடப்படுகிறது.
எஸ்டி என்பது ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துடனும் அல்லது வேறு எந்த வகையான முதலீட்டுடனும் தொடர்புடைய ஒரு எண்ணாகும், இது அந்தத் திட்டத்திலிருந்து உங்கள் வருமானம் சராசரி வருமானத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறது என்பதைக் கூறுகிறது.
ஸ்டாண்டர்டு டிவியேஷன் பற்றி புரிந்துகொள்ளுதல்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தால் பெறப்படும் வருடாந்திர வருமானம் முதலீட்டு முடிவுகளில் ஒரு தீர்க்கமான காரணியாகும், ஆனால் சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக இந்த வருமானம் சீராக இருக்காது. இதில் உள்ள ஆபத்தை அளவிட எஸ்டி உங்களுக்கு உதவும்; வேறு விதமாகக் கூறினால், வருமானம் சராசரியை விட எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக வருகிறது என்பதாகும்.
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். 6 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலையை நீங்கள் கண்காணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பதிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன-
மேலே குறிப்பிட்டுள்ள அட்டவணையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை சராசரி ₹ 33.8571 ஆகும். எந்தவொரு மாதத்திலும் சராசரி விலையிலிருந்து இந்த விலை எவ்வளவு ஏற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது நாம் பார்ப்போம்-
சராசரி விலையில் இருந்து காணப்படும் சராசரி மாறுபாடு ₹ 6.266 க்கு சமமாகும். இது, பெரும்பாலான நேரங்களில், விலையானது ₹. 6.266 ஐ விட அதிகமாகவோ அல்லது ₹.33.8571ஐ விட குறையவோ செய்வதில்லை. 6.266 இன் இந்த மதிப்பு ஸ்டாண்டர்டு டீவியேஷன் என அழைக்கப்படுகிறது, மேலும் இதனை ரிட்டர்னிலும் பயன்படுத்தலாம்.
ஒரு முதலீட்டாளராக, ஒரு டெபிட் திட்டத்துடன் ஒப்பிடும்போது ஈக்விட்டி திட்டத்திற்கு அதிக அபாயங்கள் இருக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு ஏற்ற இறக்கத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள்? ஈக்விட்டி திட்டத்தின் சராசரி ஆண்டு வருமானம் 15% மற்றும் ஸ்டாண்டர்டு டீவியேஷன் 12 எனில், உங்கள் வருமானம் குறைந்தபட்சம் 3% அல்லது அதிகபட்சம் 27% வரை இருக்கும்.
மேலே உள்ள விளக்கப்படங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே, இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த தொடர்புடையதும் அல்ல
நினைவில் கொள்ள வேண்டியவைகள்-
- கடன் திட்டங்கள் போன்ற குறைந்த-ஆபத்து மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள், ஈக்விட்டி திட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த எஸ்டி-ஐ கொண்டிருக்கும்.
- குறைந்த அல்லது உயர்ந்த எஸ்டி ஒரே வகையின் இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஒப்பிடும் வரை எந்த திட்டத்தையும் சிறப்பாக்குவதில்லை. எடுத்துக்காட்டாக, இரண்டு லார்ஜ் கேப் ஈக்விட்டி திட்டங்களின் எஸ்டி-யை ஒப்பிட்டு அவற்றுக்கு இடையே முடிவு செய்யலாம், ஆனால் டெபிட் திட்டத்தின் எஸ்டி-யை லார்ஜ் கேப் ஈக்விட்டி திட்டத்துடன் ஒப்பிடக்கூடாது.
- வகை தானாகவே அதிக ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டிருந்தால், அதாவது அதிக எஸ்டி எனில் - அந்த திட்டம் நிலையற்றது அல்லது தவிர்க்கக்கூடியது என்று அர்த்தமல்ல. அதேபோல், குறைந்த எஸ்டி கொண்ட ஒரு டெபிட் திட்டம் நல்ல தேர்வு இல்லை என்று அர்த்தமல்ல.
- நீண்ட கால முதலீட்டு காலம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் தொடர்புடைய ஏற்ற இறக்கத்தைக் குறைக்கும் என்பதால், எஸ்டி குறைவாக இருக்கும்.
முடிவு-
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் எஸ்டி அந்தத் திட்டத்தின் அபாயத்தை அளவிட உங்களுக்கு உதவக்கூடும், ஆனால் அது உள்ளுணர்வு கொடுப்பதில்லை, அதாவது தனியாக பார்க்கும்போது அது எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதில்லை. இது ஒரு ஒப்பீட்டு அளவீடு மற்றும் பிற திட்டங்களுடன் தொடர்புடையதாக எப்போதும் இருக்கும். மேலும் விவரங்களுக்கு உங்கள் மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டரை தொடர்புகொள்ளலாம்.
இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல.