உள்நுழைக

உங்கள் முதலீட்டுத் திட்டத்திற்கு ஹெல்த் செக்-அப் தேவைப்படலாம்

நாம் முன்கூட்டியே திட்டமிட்டு, எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும் என்பது உண்மைதான். அதே சமயம், நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கை எப்போதும் அமையாது என்பதும் உண்மைதான். எனவே, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவிற்கும் மறுபரிசீலனை தேவைப்படலாம். உங்கள் வருமானம், செலவுகள், கடன், பொறுப்புகள், தற்போதைய முதலீடுகள் போன்றவைகளில் பல மாறுபாடுகள் இருக்கலாம். அவை மாறலாம், அதற்கேற்றாற்போல் நீங்கள் உங்கள் பாதையையும் மாற்ற வேண்டியிருக்கலாம்.

நீங்கள் அதை எவ்வாறு அணுக முடியும் என்பதை இங்கே காணுங்கள்-

இலக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்

அனுமானமாக கூறினால், 25வயதின் பாதியில், உங்களின் இலக்குகளில் ஒன்று உங்கள் காரை ஆடம்பரமாக மேம்படுத்துவதாக இருக்கலாம்; இருப்பினும், உங்களுக்கு 30 வயது ஆகும்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, உங்கள் குழந்தையின் கல்விக்காக முதலீடு செய்வது முந்தைய இலக்கை விட அதிக முக்கியமாக மாறலாம். எனவே, உங்கள் முந்தைய இலக்கிற்காக நீங்கள் ஒரு டெபிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், நீங்கள் இப்போது நீண்ட காலத்தை சிந்தித்து உங்கள் குழந்தையின் கல்விக்கான ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.

இலக்குகளில் மாற்றம் ஏற்படுவது உங்கள் போர்ட்ஃபோலியோவில் அசெட் அலோகேஷன் அல்லது ரிஸ்க் அப்பிட்டைடில் மாற்றத்தை ஏற்படுத்தும் ; இந்த மாற்றங்களை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது முக்கியமான விஷயம்.

வெவ்வேறு இலக்குகளுக்கான பல்வேறு முதலீடுகள்

உங்கள் வெவ்வேறு இலக்குகளுக்கு வெவ்வேறு வகையான முதலீடுகள் தேவைப்படலாம், மற்றும் நீங்கள் இலக்குகளை மாற்றுவதால், முதலீடுகளுக்கு மாற்றம் தேவைப்படலாம். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய நிதி இலக்கை சேர்த்திருந்தால், நீங்கள் தற்போதைய முதலீடுகளில் ஒன்றில் கூடுதல் தொகையை முதலீடு செய்ய வேண்டியதில்லை. அதே நேரத்தில், நீங்கள் ஒரு புதிய திட்டத்திலும் முதலீடு செய்ய தேவையில்லை. உங்களின் தற்போதைய போர்ட்ஃபோலியோ மிக்ஸையும் புதிய இலக்குக்குத் தேவையான முதலீட்டு வரம்பையும் சரிபார்த்து, பொருத்தமான திட்டத்தைத் தீர்மானிப்பது முக்கியம்.

முதலீட்டு வரம்புடன் உங்கள் நிதிகளை ஒருங்கிணைக்கவும்

நீங்கள் இலக்கை மாற்றியுள்ளீர்களா? அவை உங்கள் முதலீட்டு வரம்பை மாற்றியுள்ளதா? ஆம் எனில், நீங்கள் முதலீடு செய்த திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபாயங்களைப் பார்க்க வேண்டிய நேரம் இதுவாகும். உதாரணமாக, முந்தைய உதாரணத்தில், நீங்கள் சொகுசு கார் இலக்கை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்திருந்தால்; பிறகு, நீங்கள் ஒரு ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்கலாம், ஏனெனில் உங்கள் முதலீட்டு வரம்பு மாறிவிட்டது, ஒருவேளை நீங்கள் சற்று அதிக ரிஸ்க் அப்பிட்டைட்டை சமாளிக்கலாம்.

உங்கள் போர்ட்ஃபோலியோ செயல்திறனை பார்க்கவும்

உங்கள் திட்டத்தின் இலக்கு வெற்றி விகிதத்திற்கான முக்கிய பங்களிப்பானது உங்கள் போர்ட்ஃபோலியோவின் செயல்திறன் ஆகும். தனிப்பட்ட முதலீடுகளின் செயல்திறனைச் சோதித்து, அவற்றின் வருமானம் உங்கள் எதிர்பார்ப்பின்படியும், உங்கள் இலக்குகளை அடையப் போதுமானதாக உள்ளதா என்பதையும் மதிப்பாய்வு செய்வது நல்லது. தேவையானதை விட அதிகமாக வெளிப்படும் முதலீடுகளில் இருந்து வெளியேற நீங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது குறிப்பிட்ட இலக்குகளை அடைய தேவைப்படும் முதலீட்டில் நுழைய நேரிடலாம். சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட முதலீட்டில் நீங்கள் உறுதியாக இருந்தால், அதன் இலக்கை அடைய நீங்கள் நினைத்ததை விட கூடுதல் நேரம் ஆகலாம் என்பதால் உங்கள் இலக்கை மாற்ற முடிவு செய்யலாம்.

வரிகள் மற்றும் எக்ஸிட் லோடுகளை குறைக்க

உங்கள் உள்ளார்ந்த காரணிகள் மட்டுமல்ல, வெளிப்புற காரணிகளும் கூட உங்கள் முதலீடுகளின் வருமானத்தை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கேபிடல் கெயின் வரிகள் போன்ற காரணிகள் அரசாங்க விதிமுறைகளின்படி அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அத்தகைய வரிகளை குறைப்பதை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம் மற்றும் செயல்பாட்டில், கொள்கைகளில் ஏற்படும் மாற்றத்தால் இனி அதிகப் பயனளிக்காத முதலீடுகளிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்யலாம்.

உங்களுக்கு தேவைப்படும்போது வெளியேறலாம்

நீங்கள் உங்கள் இலக்கை பூர்த்தி செய்திருந்தால், நீங்கள் திட்டத்திலிருந்து வெளியேறலாம். உங்கள் இலக்குகளின் நிறைவைக் கண்காணிப்பது, முதலில் அவற்றை வரையறுப்பது போலவே முக்கியமானது. ஒரு திட்டத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் உங்கள் எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக இருக்கலாம், இலக்குக்குப் போதுமானதாக இருந்திருக்கலாம், இருப்பினும், இப்போது இலக்கை அடைந்துவிட்டதால், தற்போதைய ரிஸ்க் அப்பிட்டைட் அடிப்படையில் நீங்கள் திட்டத்திலிருந்து வெளியேற விரும்பலாம்.

உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது சோதித்து மதிப்பாய்வு செய்வது உங்கள் ஆவணங்கள் மற்றும் பதிவுகள் சரியான இடத்தில் இருப்பதை உறுதி செய்கிறது. உங்கள் திட்டங்களைப் பற்றி உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் இதனை அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். பெரும்பாலும், இது உங்கள் சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கை-இலக்குகள் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. மறுஆய்வு காலத்தை முடிவு செய்வது ஒரு நல்ல நடைமுறையாக இருக்கலாம், ஏனெனில் தேவைக்கு அதிகமாக அடிக்கடி மதிப்பாய்வு செய்வது அவசர முடிவுகளை எடுக்க வைக்கலாம்.


பொறுப்புத் துறப்பு:
இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.
முதலீட்டாளர்களுக்கான பயனுள்ள தகவல்: அனைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் ஒரு-முறை கேஒய்சி(உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், அவை எஸ்இபிஐ இணையதளத்தில் 'இடைத்தரகர்கள்/ சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கீழ் சரிபார்க்கப்பட வேண்டும்'. உங்கள் புகார்களை தெரிவிக்க, நீங்கள் www.scores.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். கேஒய்சி பற்றிய மேலும் தகவலுக்கு, பல்வேறு விவரங்களின் மாற்றம் பற்றி அறிய மற்றும் புகார்களை தெரிவிக்க, mf.nipponindiaim.com/investoreducation/what-to-know-when-investing ஐ பார்வையிடவும் இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.

இங்குள்ள தகவல் பொதுவான படிப்பு நோக்கங்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன மற்றும் எனவே வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது ஒரு தொழில்முறை வழிகாட்டியாக கருதப்பட முடியாது. இந்த ஆவணம் பொதுவாக கிடைக்கக்கூடிய தகவல், உருவாக்கப்பட்ட தரவு மற்றும் பிற நம்பக்கூடிய ஆதாரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குனர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்த தகவலின் பெறுநர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் விசாரணைகளை நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுக்க வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த மெட்டீரியலின் தயாரிப்பு அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவர்களின் துணை நிறுவனங்கள் இந்த மெட்டீரியலில் உள்ள தகவலில் இருந்து ஏற்படும் இழந்த இலாபங்கள் உட்பட எந்தவொரு நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது உதாரணமான சேதங்களுக்கும் எந்தவொரு வழியிலும் பொறுப்பேற்காது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் பெறுநர் மட்டுமே முழுப் பொறுப்பாளியாக இருப்பார்.
மொழி பொறுப்புத் துறப்பு:
கட்டுரையை அந்தந்த வட்டார மொழி(களுக்கு) மொழிபெயர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், ஏதேனும் குழப்பம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கட்டுரையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும். இங்கு வழங்கப்பட்ட கட்டுரை பொதுவான வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கருத்துகளாக மட்டுமே உள்ளன, எனவே இவை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்களாகவோ, பரிந்துரைகளாகவோ அல்லது தொழில்முறை ஆலோசனையாகவோ கருதப்படக்கூடாது. பொதுவில் கிடைக்கும் தரவு/தகவல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தரவு மற்றும் நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குநர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் & அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்தத் தகவலைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை நம்பியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலைத் தயாரிப்பதில் அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தகவல்களிலிருந்து எழும் லாப இழப்பு உட்பட, நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவு ரீதியான, தண்டனை பெற்றுத்தரக்கூடிய அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்கமாட்டார்கள். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த முடிவிற்கும் இதன் வாசிப்பாளர் மட்டுமே முழுப் பொறுப்பாவார்.
"மேலே உள்ள விளக்கங்கள் புரிந்துகொள்வதற்கு மட்டுமே, இது என்ஐஎம்எஃப்-இன் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது அல்ல. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல."

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
மேலே