உள்நுழைக

இந்த வாரத்திற்கான நிதிச் சொல்: ஃபண்டு ஃபேக்ட் ஷீட்

மியூச்சுவல் ஃபண்டுகள் அவ்வளவு கடினமானவை அல்ல. மற்றும் நீங்கள் அவற்றில் முதலீடு செய்யும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக, மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க நிறைய தகவல்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்கின்றன. ஃபண்டு ஃபேக்ட் ஷீட் அத்தகைய ஒரு ஆவணமாகும். மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்த கண்ணோட்டத்தை முதலீட்டாளருக்கு வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு மாதமும் இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

ஃபேக்ட் ஷீட்டில் பார்க்க வேண்டிய முக்கிய அளவுருக்கள் கீழே உள்ளன-



ஸ்கீம் தொடர்பான அடிப்படைத் தகவல்

போர்ட்ஃபோலியோ கன்ஸ்ட்ரக்ஷன்

திட்ட செயல்திறன்

அடிப்படை தகவல்

இங்கே கிடைக்கும் தகவல்கள் கீழே உள்ளன-

- முதலீட்டின் நோக்கம்
- ஃபண்டு போர்ட்ஃபோலியோ
- முதலீடு செய்யும் முறைகள் (எஸ்ஐபி/லம்ப்சம்)
- குறைந்தபட்ச முதலீட்டு தொகை
- திட்டத்தின் என்ஏவி
- கிடைக்கும் திட்டங்கள் (நேரடி/வழக்கமான)
- எஸ்ஐபி/எஸ்டபிள்யுபி/எஸ்டிபி அம்சங்கள் உள்ளன
- ஏயுஎம் தரவு
- கிடைக்கும் விருப்பங்கள் (குரோத்/டிவிடெண்ட்)
- எக்ஸிட் லோடு
- தயாரிப்பு லேபிளிங்
- ரிஸ்கோமீட்டர்

மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் தன்மையை தீர்மானிக்க இது போதுமான தகவல்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் ஓய்வூதியத்திற்காக நீங்கள் முதலீடு செய்தால், நிதியின் முதலீட்டு நோக்கம் நீண்ட கால வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் உங்களுடன் இணைக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு எஸ்ஐபி-ஐத் தொடங்க விரும்பலாம், இது மீண்டும், ஒரு விருப்பமாக இருக்க வேண்டும். முக்கியமாக, தயாரிப்பு லேபிளில் - 'இந்த தயாரிப்பு இதைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு பொருத்தமானது:' என்று இருந்தால், நீங்கள் செய்ய விரும்பும் முதலீட்டை இது பிரதிபலிக்க வேண்டும். ரிஸ்கோமீட்டர், இது ஒரு 6-நிலை அளவுகோல், நிதி எவ்வளவு அபாயத்தை உள்ளடக்கியது என்பதை விளக்குகிறது, அதன் பின்னர் நிதியுடன் உங்கள் அபாயத்தைக் கையாளும் தன்மையை நீங்கள் பொருத்தலாம். மற்றும் பல.

செயல்திறன்-தொடர்பானது

கடந்த செயல்திறன் என்பது பொதுவாக மியூச்சுவல் ஃபண்டின் எதிர்கால செயல்திறனுக்கான சான்று அல்ல, ஆனால் கடந்த செயல்திறன் போக்குகளை பகுப்பாய்வு செய்ய இந்த பிரிவு உங்களுக்கு உதவும். இந்த செயல்திறன், நிதியின் பெஞ்ச்மார்க் மற்றும் சந்தை வரம்பிற்கு எதிராகப் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. இந்தச் செயல்திறன் பெரும்பாலும் ஒரு எடுத்துக்காட்டுடன் வழங்கப்படும், நீங்கள் ₹ 10,000 முதலீடு செய்திருந்தால், மதிப்பு என்னவாக இருக்கும்.

நிதி மேலாளர் குறித்து

நிதி மேலாளர் நிதியை எவ்வளவு காலம் நிர்வகித்து வருகிறார் என்பதை இது உங்களிடம் கூறுகிறது மற்றும் நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் மற்ற நிதிகள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. ஒவ்வொரு நிதியின் ஃபேக்ட் ஷீட்டிலும் செயல்திறன் தொடர்பான தரவும் நிதி மேலாளர் ஒரு நிதியை எவ்வாறு திறம்பட நிர்வகித்துள்ளார் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்கும்.

போர்ட்ஃபோலியோ கன்ஸ்ட்ரக்ஷன்

ஆனால் மியூச்சுவல் ஃபண்டு எங்கே முதலீடு செய்கிறது? இந்தப் பிரிவு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது. இந்த பிரிவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஈக்விட்டி, கடன் மற்றும் ரொக்க வைத்திருப்புகளில் நிதியின் சொத்துகளின் சதவீதங்கள் முதலீடு செய்யப்படுகின்றன. சிறந்த-10 வைத்திருப்புகளுடன் துறை-வாரியாக ஒதுக்கீடுகளும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன. கடன் நிதிகளுக்கு, நிதியின் கிரெடிட் சுயவிவரம், கடன் வைத்திருப்புகளின் கூடுதல் பிரேக்-அப், மற்றும் சராசரி மெச்சூரிட்டி,ஒய்டிஎம், மாற்றியமைக்கப்பட்ட காலம் போன்ற தரவு கிடைக்கிறது.

முக்கிய விகிதங்கள்

மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் முக்கிய-செயல்திறன் விகிதங்கள் மியூச்சுவல் ஃபண்டு குறித்து உங்களுக்கு நிறைய கூறுகின்றன. இதில் பீட்டா, ஸ்டாண்டர்டு டிவியேஷன், ஷார்ப் விகிதம், செலவு விகிதம் போன்ற விகிதங்கள் அடங்கும். ஃபண்டு ஃபேக்ட் ஷீட்டில் கிடைக்கும் இந்த அனைத்து விகிதங்களின் அடிப்படையில், நீங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.



ஒட்டுமொத்தமாக, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்டு அல்லது உங்கள் தற்போதைய மியூச்சுவல் ஃபண்டில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா போன்ற பல விஷயங்களை ஃபேக்ட் ஷீட் கூறுகின்றது. எந்தவொரு நிதியிலும் முதலீடு செய்வதற்கும் முன்பாக அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


பொறுப்புத் துறப்பு:
முதலீட்டாளர்களுக்கான பயனுள்ள தகவல்: அனைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் ஒரு-முறை கேஒய்சி(உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், அவை எஸ்இபிஐ இணையதளத்தில் 'இடைத்தரகர்கள்/ சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கீழ் சரிபார்க்கப்பட வேண்டும்'. உங்கள் புகார்களை தெரிவிக்க, நீங்கள் www.scores.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். கேஒய்சி பற்றிய மேலும் தகவலுக்கு, பல்வேறு விவரங்களின் மாற்றம் பற்றி அறிய மற்றும் புகார்களை தெரிவிக்க, mf.nipponindiaim.com/investoreducation/what-to-know-when-investing ஐ பார்வையிடவும் இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.

இங்குள்ள தகவல் பொதுவான படிப்பு நோக்கங்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன மற்றும் எனவே வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது ஒரு தொழில்முறை வழிகாட்டியாக கருதப்பட முடியாது. இந்த ஆவணம் பொதுவாக கிடைக்கக்கூடிய தகவல், உருவாக்கப்பட்ட தரவு மற்றும் பிற நம்பக்கூடிய ஆதாரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குனர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்த தகவலின் பெறுநர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் விசாரணைகளை நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுக்க வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த மெட்டீரியலின் தயாரிப்பு அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவர்களின் துணை நிறுவனங்கள் இந்த மெட்டீரியலில் உள்ள தகவலில் இருந்து ஏற்படும் இழந்த இலாபங்கள் உட்பட எந்தவொரு நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது உதாரணமான சேதங்களுக்கும் எந்தவொரு வழியிலும் பொறுப்பேற்காது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் பெறுநர் மட்டுமே முழுப் பொறுப்பாளியாக இருப்பார்.
மொழி பொறுப்புத் துறப்பு:
கட்டுரையை அந்தந்த வட்டார மொழி(களுக்கு) மொழிபெயர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், ஏதேனும் குழப்பம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கட்டுரையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும். இங்கு வழங்கப்பட்ட கட்டுரை பொதுவான வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கருத்துகளாக மட்டுமே உள்ளன, எனவே இவை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்களாகவோ, பரிந்துரைகளாகவோ அல்லது தொழில்முறை ஆலோசனையாகவோ கருதப்படக்கூடாது. பொதுவில் கிடைக்கும் தரவு/தகவல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தரவு மற்றும் நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குநர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் & அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்தத் தகவலைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை நம்பியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலைத் தயாரிப்பதில் அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தகவல்களிலிருந்து எழும் லாப இழப்பு உட்பட, நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவு ரீதியான, தண்டனை பெற்றுத்தரக்கூடிய அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்கமாட்டார்கள். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த முடிவிற்கும் இதன் வாசிப்பாளர் மட்டுமே முழுப் பொறுப்பாவார்.
"மேலே உள்ள விளக்கங்கள் புரிந்துகொள்வதற்கு மட்டுமே, இது என்ஐஎம்எஃப்-இன் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது அல்ல. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல."

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
மேலே