இந்த வாரத்தின் பைனான்ஷியல் நிலை- இலக்கு திட்டமிடல்
நீங்கள் எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எவ்வளவு முதலீடு செய்வது, எங்கு முதலீடு செய்வது என்பதை நீங்கள் எப்படி தெரிந்து வைத்திருப்பீர்கள்? இதற்கு தான் இலக்கு திட்டமிடல் முக்கியமானது. இது உங்கள் இலக்குகளை பட்டியலிடுவது மற்றும் அவற்றை அடைவதற்கான திட்டத்தை உருவாக்கும் செயல்முறையாகும். இந்த இலக்குகள் தனிப்பட்ட அல்லது பைனான்ஷியல் சார்ந்ததாக இருக்கலாம்; இந்த கட்டுரையில் பைனான்ஷியல் இலக்குகள் பற்றி பார்ப்போம். பல நேரங்களில், நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முதலீடு செய்யத் தொடங்கலாம்; அல்லது நீங்கள் இலக்கு திட்டமிடல் மற்றும் முதலீட்டில் தொடங்கி, பின்னர் இடையில், உங்கள் இலக்குகளிலிருந்து திசை திரும்பக்கூடலாம். எனவே, இலக்கு நிர்ணயம் ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்திற்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் மற்றும் சீரான இடைவெளியில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.. இப்படி சிந்தித்து பாருங்கள் - அளவிடப்பட்டு அதை நோக்கிச் செயல்படாத வரை இலக்கு கனவாகவே இருக்கும்.
உங்களுக்கு ஏன் இலக்கு திட்டமிடல் வேண்டும்?
உங்கள் நிதி இலக்குகளை, முதலீட்டுத் திட்டமிடலின் எளிமைக்காக, கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்-
ஒரு நீண்ட கால இலக்கு உங்களுக்கு அதிக நேரத்தை கொடுக்கிறது என்று சொல்ல தேவையில்லை, எனவே சில ஆபத்துக்களை உங்களால் எடுக்க முடியலாம். மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டுக்கு உகந்தவையாக இருப்பதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த சராசரி வருமானத்தை உங்களுக்கு வழங்கலாம். அதேபோல் , உங்கள் முதலீட்டு வரம்பு குறைவாக இருந்தால், குறுகிய கால இலக்குக்கு மிகவும் நிலையான முதலீடு தேவைப்படலாம்.
இலக்கு அமைப்பதற்கான சிறந்த வழி
- குறிப்பிட்ட இலக்குகளை லட்சியமாக கொள்ளுங்கள்-
‘போதும்’ என்ற அளவிலான பணத்தை கையில் வைத்துக்கொண்டு 60க்குள் ஓய்வு பெற வேண்டும் என்று மட்டும் கூறாதீர்கள். கார்பஸை வரையறுக்கவும்.மாறாக, என் வசம் ₹ 5 கோடியுடன் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் . இதேபோல், அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் வீட்டுக் கடனில் 80% செலுத்தி முடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது மற்றொரு உதாரணம். ஒவ்வொரு வழிமுறையிலும் முன்னுரிமை அளித்து குறிப்பிடவும். - அவற்றை அளவிடக்கூடியதாக வைத்திருங்கள்
‘போதும்’ என்ற அளவிலான பணத்தை கையில் வைத்துக்கொண்டு 60க்குள் ஓய்வு பெற வேண்டும் என்று மட்டும் கூறாதீர்கள். கார்பஸை வரையறுக்கவும்.மாறாக, என் வசம் ₹ 5 கோடியுடன் 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறேன் என்று சொல்லுங்கள் . இதேபோல், அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் வீட்டுக் கடனில் 80% செலுத்தி முடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது மற்றொரு உதாரணம். ஒவ்வொரு வழிமுறையிலும் முன்னுரிமை அளித்து குறிப்பிடவும். - அடையக்கூடிய இலக்குகளை கொண்டிருங்கள்
இப்போது 30 ஆண்டுகளில் ₹5 கோடியை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளீர்கள், நிகழ்காலத்திற்கு திரும்பி வந்து பாருங்கள், தற்போதைய வருமானத்தில் இந்த இலக்கை நடைமுறையில் அடைய முடியுமா? ஆண்டு பணவீக்கம் மற்றும் வருமான அதிகரிப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் ₹2 கோடி சம்பாதிக்கும் திறன் கொண்டவராக இருக்கும்போது ₹5 கோடி இலக்கை நிர்ணயிப்பது உங்களுக்கு நியாயமற்றது மற்றும் அடைய முடியாதது ஆகும். - யதார்த்தத்துடன் பொருந்தி இருங்கள்
நீங்கள் ரிட்டையர் ஆன பெற்ற பிறகு ஒரு ஹோட்டலை திறக்க போகிறீர்கள் என்று மட்டும் சொல்லாதீர்கள். இந்த இலக்கை அடைய பணத்தைத் தவிர வேறு வளங்கள் உங்களிடம் உள்ளதா? அது போன்ற ஒரு குறிக்கோளால் கோரப்படுபவை கார்பஸ் ஆகும்- அதை உருவாக்க உங்களுக்கு வழி இருக்கிறதா? நீங்கள் ரிட்டையர்மென்டுக்காக ₹5 கோடி ரூபாயை உருவாக்குவது அடையக்கூடியதாக இருக்கலாம், ஆனால் பணவீக்கம் மற்றும் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு இந்த தொகை யதார்த்தமானதா என்று சிந்தியுங்கள். - காலக்கெடுவுடன் செயல்படுங்கள்
ஒவ்வொரு ஃபைனான்ஷியல் இலக்கிற்கும் ஒரு நேர வரம்பை வைக்கவும், இதன் மூலம் அவற்றை அடைய உங்களுக்கு எத்தனை ஆண்டுகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக, உங்களுக்கு இப்போது 40 வயதாக இருந்தால், உங்களின் ஓய்வூதிய இலக்கு ₹5 கோடியானது 20 ஆண்டுகளில் நிறைவடைகிறது. ஆனால் உங்களுக்கு 20 வருடங்கள் மட்டுமே உள்ளது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எங்கு முதலீடு செய்வது, எவ்வளவு காலம் முதலீடு செய்வது என்று எப்படி முடிவு செய்வீர்கள்?
இலக்கு திட்டமிடல் என்பது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு பயணத்தைத் தொடங்குவதற்கான முதல் மற்றும் மிக முக்கியமான படியாகும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்தவுடன், உங்கள் ரிஸ்க்-எடுக்கும் திறனை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். எனவே, உங்கள் பைனான்ஷியல் இலக்குகளை யோசித்து குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.