உள்நுழைக

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் – வகைகள், நன்மைகள் மற்றும் முதலீடு

உங்கள் உள்ளூர் மல்டி பர்பஸ் கடையில் மளிகை சாமான்கள் முதல் காய்கறிகள், எழுதுபொருட்கள் வரை அனைத்தையும் எப்படி வைத்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். வாடிக்கையாளரின் கவனம் ஒரே ஒரு பொருளின் மீது செல்வதை தவிர்க்க கடைக்காரர் முயற்சிக்கிறார். எனவே அபாயங்கள் குறைக்கப்பட்டு, அவரது வருமானம் பாதுகாப்பாக கிடைக்கிறது. இதேபோன்ற யுக்திகளை தான் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் பின்பற்றுகின்றன. ஈக்விட்டி, டெபிட் போன்ற பல்வேறு அசெட் கிளாஸ்களில் முதலீடு செய்யும் ஃபண்டுகள், ஏனெனில், ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? ஒரு முதலீட்டாளராக நீங்கள், ஈக்விட்டி போன்ற அசெட் கிளாஸ் வழங்கக்கூடிய வருமானத்தை உருவாக்கும் வாய்ப்பை விரும்பலாம், அதே நேரத்தில், டெபிட் அசெட் கிளாஸ் வழங்கும் குறைந்த ஆபத்தையும் நீங்கள் விரும்பலாம். ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அபாயத்தைத் தவிர்க்க அசெட் கிளாஸ்கள் முழுவதும் கார்பஸை விநியோகிக்கின்றன.

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் பல்வகைப்படுத்தல் மற்றும் சொத்து ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளன. சொத்து ஒதுக்கீடு என்பது உங்கள் நிதி இலக்குகள், ஆபத்து மற்றும் முதலீடுகளின்படி பல்வேறு சொத்து பிரிவுகளுக்கு உங்கள் பணத்தை ஒதுக்கும் செயல்முறையாகும். பல்வகைப்படுத்தல் என்பது அசெட் வகுப்புகளுக்குள் பன்முகத்தன்மையை உருவாக்குவதாகும். முந்தையது ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவிற்கான ரிஸ்க்-ரிட்டர்ன் பேலன்ஸ்க்கு உங்களுக்கு உதவக்கூடும், பிந்தையது ஒரு அசெட் வகுப்பிற்குள் உள்ள அபாயங்களைச் சமப்படுத்த உதவுகிறது. ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தக் கருத்துகளை ஒருங்கிணைத்து முதலீட்டாளருக்கு ஈக்விட்டி மற்றும் டெபிட் இரண்டின் நன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

முக்கியமாக, ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஈக்விட்டி மற்றும் டெபிட் பத்திரங்களின் கலவையைக் கொண்டுள்ளன. ஆனால் சில ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கம் போன்ற பிற அசெட் வகுப்புகளிலும் முதலீடு செய்யும்.

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வகைகள்

Conservative Hybrid Funds - Nippon India Mutual Fund Balanced Hybrid Fund - Nippon India Mutual Fund Aggressive Hybrid Fund - Nippon India Mutual Fund Multi Asset Allocation Fund - Nippon India Mutual Fund Equity Savings Fund - Nippon India Mutual Fund Dynamic Asset Allocation / Balanced Advantage Funds Arbitrage Fund - Nippon India Mutual Fund

குறிப்பு: 6 அக்டோபர் 2017 தேதியிட்ட ‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வகைப்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு’ என்ற எஸ்இபிஐ-இன் சுற்றறிக்கையின்படி மேலே குறிப்பிடப்பட்ட கலப்பினத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளின் நன்மைகள்

  1. ஒரே மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பல அசெட் வகுப்புகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்
  2. உங்கள் ரிஸ்க் அப்பிட்டைட் மற்றும் அசெட் வகுப்புகளுக்கான விருப்பத்தைப் பொறுத்து, உங்கள் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்
  3. ஈக்விட்டி மற்றும் அசெட் கிளாஸ்களுக்கு இடையில் உங்கள் அபாயங்களை வேறுபடுத்துவதற்கான வாய்ப்பை அவை உங்களுக்கு வழங்குகின்றன
  4. அவை உங்களுக்கு வெறும் அசெட் அலோக்கேஷன் மட்டுமல்லாமல், பல்வகைப்படுத்தலும் வழங்குகின்றன

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் யார் முதலீடு செய்யலாம்?

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் முதல் முறையாக முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு உலகில் ஒரு நல்ல நுழைவு புள்ளியாக இருக்கலாம். கடன் கூறு ஒப்பீட்டு நிலைத்தன்மையை வழங்கலாம் மற்றும் அதே நேரத்தில் ஈக்விட்டி வெளிப்பாடு உங்களுக்கு செல்வத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கலாம். தங்கள் போர்ட்ஃபோலியோவில் பல்வகைப்படுத்தலை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் அல்லது பல்வேறு அசெட் கிளாஸ்களில் வெளிப்பாட்டை எதிர்பார்க்கும் ஓய்வுபெற்ற தனிநபர்களும் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதைப் பரிசீலிக்கலாம்.

ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரிவிதிப்பு

உள்நாட்டு ஈக்விட்டி பங்குகளுக்கு 65% அல்லது அதற்கு மேற்பட்ட ஒதுக்கீட்டுடன் ஒரு ஹைப்ரிட் ஃபண்டு வரிவிதிப்பு நோக்கங்களுக்காக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு ஆக கருதப்படுகிறது (நிதியின் நிதி தவிர), மற்றும் மீதமுள்ள அனைத்தும் ஈக்விட்டி ஃபண்டுகளை தவிர மற்றவையாக கருதப்படுகின்றன.

ஈக்விட்டி ஓரியண்டட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்கு, வரிவிதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது-

குறுகிய கால கேப்பிட்டல் கெயின்ஸ் (எஸ்டிசிஜி) வரி- கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முதலீட்டாளர் யூனிட்களை வைத்திருந்தால், அத்தகைய கெயின்களுக்கு 15% வரி விதிக்கப்படும்.

நீண்ட கால கேபிடல் கெயின்ஸ் (எல்டிசிஜி) வரி- ஒரு முதலீட்டாளர் கையகப்படுத்திய நாளிலிருந்து 12 மாதங்களுக்கு மேல் யூனிட்களை வைத்திருந்தால், அத்தகைய கெயின்களுக்கு @ 10% வரி விதிக்கப்படும். கிராண்ட்ஃபாதரிங் காஸ்டின் கூடுதல் நன்மை மற்றும் வரம்பு ₹ 1 லட்சம் வரை கிடைக்கிறது.

மேலும், ஈக்விட்டி ஓரியண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் எஸ்டிடி-க்கு உட்பட்டவை (பத்திரங்கள் பரிவர்த்தனை வரி).

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் தவிர மற்ற திட்டங்களுக்கு வரிவிதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது-

குறுகிய கால கேப்பிட்டல் கெயின்ஸ் (எஸ்டிசிஜி) வரி- கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முதலீட்டாளர் யூனிட்களை வைத்திருந்தால், முதலீட்டாளருக்கு பொருந்தக்கூடிய வரி அடுக்கு விகிதங்களின்படி அத்தகைய கெயின்களுக்கு வரி விதிக்கப்படும்.

நீண்ட-கால கேபிடல் கெயின் (எல்டிசிஜி) வரி- ஒரு முதலீட்டாளர் தான் கையகப்படுத்திய தேதியிலிருந்து 36 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு யூனிட்களை வைத்திருந்தால், குடியிருப்பாளர்களுக்கு அத்தகைய ஆதாயம் வரிக்கு @ 20% (இண்டெக்ஸேஷன் உடன்) வரிக்கு உட்பட்டது. இண்டெக்ஸேஷன் நன்மை வாங்குதல் விலையின் பணவீக்கத்தை கணக்கிட உங்களுக்கு உதவுகிறது, இதன் மூலம் அசல் முதலீட்டு மதிப்பை விட குறியீட்டு முதலீட்டு மதிப்புடன் லாபங்களை கணக்கிடுகிறது. பணவீக்க இண்டெக்ஸ் (சிஐஐ) என்பது ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் இந்த மதிப்பைத் தீர்மானிக்கப் பயன்படும் காரணியாகும்.


பொறுப்புத் துறப்பு:
முதலீட்டாளர்களுக்கான பயனுள்ள தகவல்: அனைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் ஒரு-முறை கேஒய்சி(உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், அவை எஸ்இபிஐ இணையதளத்தில் 'இடைத்தரகர்கள்/ சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கீழ் சரிபார்க்கப்பட வேண்டும்'. உங்கள் புகார்களை தெரிவிக்க, நீங்கள் www.scores.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். கேஒய்சி பற்றிய மேலும் தகவலுக்கு, பல்வேறு விவரங்களின் மாற்றம் பற்றி அறிய மற்றும் புகார்களை தெரிவிக்க, mf.nipponindiaim.com/investoreducation/what-to-know-when-investing ஐ பார்வையிடவும் இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.

இங்குள்ள தகவல் பொதுவான படிப்பு நோக்கங்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன மற்றும் எனவே வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது ஒரு தொழில்முறை வழிகாட்டியாக கருதப்பட முடியாது. இந்த ஆவணம் பொதுவாக கிடைக்கக்கூடிய தகவல், உருவாக்கப்பட்ட தரவு மற்றும் பிற நம்பக்கூடிய ஆதாரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குனர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்த தகவலின் பெறுநர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் விசாரணைகளை நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுக்க வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த மெட்டீரியலின் தயாரிப்பு அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவர்களின் துணை நிறுவனங்கள் இந்த மெட்டீரியலில் உள்ள தகவலில் இருந்து ஏற்படும் இழந்த இலாபங்கள் உட்பட எந்தவொரு நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது உதாரணமான சேதங்களுக்கும் எந்தவொரு வழியிலும் பொறுப்பேற்காது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் பெறுநர் மட்டுமே முழுப் பொறுப்பாளியாக இருப்பார்.
மொழி பொறுப்புத் துறப்பு:
கட்டுரையை அந்தந்த வட்டார மொழி(களுக்கு) மொழிபெயர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், ஏதேனும் குழப்பம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கட்டுரையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும். இங்கு வழங்கப்பட்ட கட்டுரை பொதுவான வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கருத்துகளாக மட்டுமே உள்ளன, எனவே இவை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்களாகவோ, பரிந்துரைகளாகவோ அல்லது தொழில்முறை ஆலோசனையாகவோ கருதப்படக்கூடாது. பொதுவில் கிடைக்கும் தரவு/தகவல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தரவு மற்றும் நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குநர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் & அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்தத் தகவலைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை நம்பியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலைத் தயாரிப்பதில் அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தகவல்களிலிருந்து எழும் லாப இழப்பு உட்பட, நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவு ரீதியான, தண்டனை பெற்றுத்தரக்கூடிய அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்கமாட்டார்கள். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த முடிவிற்கும் இதன் வாசிப்பாளர் மட்டுமே முழுப் பொறுப்பாவார்.
"மேலே உள்ள விளக்கங்கள் புரிந்துகொள்வதற்கு மட்டுமே, இது என்ஐஎம்எஃப்-இன் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது அல்ல. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல."

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
மேலே