உள்நுழைக

​மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் திட்டம் என்றால் என்ன?​

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய எஸ்ஐபி உங்களை அனுமதிக்கிறது; மறுபக்கம், எஸ்டபிள்யுபி, உங்கள் முதலீடுகளிலிருந்து வித்டிரா செய்ய உதவுகிறது. வேறு விதமாக கூறினால், எஸ்டபிள்யுபி, என்பது எஸ்ஐபி-க்கு நேர்மாறானது, ஒரே ஒற்றுமை என்னவென்றால், இரண்டும் சிறிய பணத்தில் (நிதி நிறுவனங்களை பொறுத்து) மற்றும் மாதாந்திர, காலாண்டு போன்ற கால இடைவெளிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

எஸ்டபிள்யூபி என்றால் என்ன?

எஸ்டபிள்யுபி என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு சேவையாகும், இதன் கீழ் உங்கள் செலவினங்களைச் சமாளிக்க நீங்கள் ஏற்கனவே உள்ள போர்ட்ஃபோலியோவிலிருந்து குறிப்பிட்ட தொகையை அவ்வப்போது வித்டிரா செய்யலாம். உங்களின் ஃபோலியோ எண், முதல் வித்டிராவல் செய்த தேதி, வித்டிராவல் எண்ணிக்கை மற்றும் வங்கி விவரங்களுடன் தொகையைக் குறிப்பிடும் தொடர்புடைய படிவத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம்வழக்கமான பணப்புழக்கத்தின் தேவைக்கேற்ப இந்த சேவையைப் பெறலாம்.

எஸ்டபிள்யுபி இரண்டு வகைப்படும்-

  1. ஃபிக்ஸ்டு தொகை எஸ்டபிள்யுபி- இங்கே, குறிப்பிட்ட தேதியில் வித்ட்ரா செய்ய வேண்டிய தொகையை நீங்கள் பிக்ஸ் செய்யலாம்
  2. அப்ரிஸியேஷன் எஸ்டபிள்யுபி- இதில், நீங்கள் திட்டத்திலிருந்து அப்ரிஸியேஷன் அல்லது கெயினை மட்டுமே வித்டிரா செய்வீர்கள், அதாவது நீங்கள் சம்பாதித்த வருமானத்தை, ஆனால் அசல் தொகையை அல்ல.

உங்களுக்கு எஸ்டபிள்யுபி தேவைப்படும் சூழ்நிலைகள் யாவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின் வருமானம்: உங்களுக்கான வழக்கமான வருமானத்தை உருவாக்க உங்கள் ரிட்டையர்மென்ட் ஃபண்டை நிதியை அணுகும்போது.எஸ்டபிள்யுபி-ஆனது பொதுவான பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும்.

தற்போதைய வருமான ஆதாரத்தை நிரப்புதல்/பயன்படுத்துதல்- உங்கள் வழக்கமான வருமான ஆதாரத்தை விட்டு வெளியேறி, ஒரு தொழில்முனைவோராக உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிப்பதாலோ அல்லது பணிநீக்கங்களினாலோ நீங்கள் இழக்க நேரிடும். வேலை. இரண்டு சந்தர்ப்பங்களிலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்க்கை முறையைத் தக்கவைக்க உங்களுக்கு வழக்கமான வருமானம் தேவைப்படும்.

உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்- உங்கள் நிதி இலக்குகளை அடைய ஒரு எஸ்டபிள்யுபி உங்களுக்கு உதவும். எடுத்துக்காட்டாக, ஒரு நிலையான மாதாந்திர வருமானத்தை உருவாக்குவதே உங்கள் இலக்காக இருந்தால், அதை அடைய உங்களுக்கு எஸ்டபிள்யுபி உதவும்.

குடும்ப அவசரகாலநிலை- வாழ்க்கை கணிக்க முடியாதது, உங்கள் நிதியை நீங்கள் எவ்வளவு சிக்கனம் செய்து திட்டமிட்டாலும், நீங்கள் திட்டமிடாத சூழ்நிலைகளுக்கு எப்போதும் இடமிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் கூடுதல் பணம் தேவை என்றால், எஸ்டபிள்யுபி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

இதேபோல், பல சூழ்நிலைகள் ஏற்படலாம், அதற்காக நீங்கள் எஸ்டபிள்யுபி-ஐத் தொடங்க வேண்டும்.

எஸ்டபிள்யுபி-ஐ பற்றி மேலும் ஆழமாக பார்த்தல்

எடுத்துக்காட்டுடன், எஸ்டபிள்யூபி-யின் வழிமுறையை புரிந்துகொள்வோம்.

இன்று உங்களிடம் என்ஏவி ₹ 10 உடன் டெபிட் திட்டங்களில் ₹1,00,00,000உள்ளது, அதாவது 10,00,000 யூனிட்கள் உள்ளது. ஆண்டு வருமானம் 6% என்று வைத்துக் கொண்டால், மாத வருமானம் 0.5% ஆக இருக்கும். நீங்கள் ₹ 10,000 மதிப்பிலான மாதாந்திர எஸ்டபிள்யுபி -ஐ அடுத்த மாதம் முதல்தொடங்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், வித்டிராவலுக்கு பின்னால் உள்ள கணக்கீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது-

Navஎஸ்டபிள்யுபி மதிப்பு (₹)ரெடீம் செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கைமீதமுள்ள யூனிட்களின் எண்ணிக்கைதிட்ட காலத்தின் முடிவில் முதலீட்டு மதிப்பு (₹)
10.0000--10,00,0001,00,00,000
10.050010,000995.02499,99,004.97511,00,40,000
10.00010,000990.07459,98,014.90061,00,80,200
10.00010,000985.14889,98,017.75191,01,20,601

0.5% வருமானத்துடன், முதல் எஸ்டபிள்யுபி தவணையின் போது, ​​உங்கள் என்ஏவி ₹ 10 லிருந்து ₹10.05 ஆக உயர்ந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் ₹ 10,000 வித்டிரா செய்ய விரும்பினால், நீங்கள் (10,000/10.05)=995.0249 ரெடீம் செய்திருக்க வேண்டும் திட்டத்தின் யூனிட்கள். இந்த ரிடெம்ப்ஷனுக்கு பிறகு, உங்களிடம் 999,004.9751 மீதம் இருக்கும் இதே மதிப்பு தான் ஒவ்வொரு எஸ்டபிள்யுபி ரிடெம்ப்ஷனுக்கு பிறகும் இருக்கும்.

எஸ்டபிள்யுபி மதிப்பின் தேர்வானது உங்கள் மொத்த போர்ட்ஃபோலியோ மதிப்பு மற்றும் உங்களின் மாதாந்திர/காலாண்டு பணப்புழக்கத் தேவையைப் பொறுத்து இருக்கும். மேலே உள்ள எடுத்துக்காட்டு கணக்கீட்டிற்காக ஒரு அனுமானம் மட்டுமே, இது பரிந்துரைக்கப்பட்ட எஸ்டபிள்யுபி மதிப்பு அல்ல.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளருக்கு இதில் என்ன இருக்கிறது?

வழக்கமான பணப்புழக்கம்
வரி தொடர்பான நன்மைகள்

அதே உதாரணத்தை எடுத்துக்கொண்டு, நீங்கள் ஒவ்வொரு முறையும் யூனிட்களை ரெடீம் செய்யும்போது மொத்தமாக ₹ 10,000 ஐ பெறுவீர்களா என்று யோசித்தீர்களா? இதிலுள்ள நல்ல செய்தி என்னவென்றால், ஒரு ரெசிடெண்ட் முதலீட்டாளருக்கான எஸ்டபிள்யுபி தொகைக்கு டிடிஎஸ் பாதிப்பு இல்லை.

மேலும், திட்டத்தை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து, குறுகிய கால கேபிடல் கெயின்ஸ் வரி (எஸ்டிசிஜி வரி) அல்லது நீண்ட கால கேபிடல் கெயின்ஸ் வரி (எல்டிசிஜி வரி) பொருந்தும்.

மேலே நாம் விவாதித்த எடுத்துக்காட்டில், மேற்கூறிய டெபிட் ஃபண்டில் முதலீட்டை வைத்திருக்கும் காலம் 36 மாதங்களுக்கும் குறைவாக உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், எஸ்டிசிஜி வரி 30% (தவிர. கூடுதல் கட்டணம் மற்றும் செஸ்) கேப்பிட்டல் கெயினில் பொருந்தும் (முதலீட்டாளர் அதிக வருமான வரி விகித நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்). அதே எண்களைப் பயன்படுத்தி, முதல் 3 எஸ்டபிள்யுபி தவணைக்கு எஸ்டிசிஜி வரி விதிக்கப்படும்-

மாதம்Navயூனிட்கள்மதிப்புஎஸ்டபிள்யுபிரிடெம்ப்ஷன் செய்யப்பட்ட யூனிட்கள்மீதமுள்ள யூனிட்கள் சந்தை மதிப்புஎஸ்டிசிஜி எஸ்டிசிஜி வரி
-10.00100000010000000100000010000000
110.0510000001005000010000995.02999004.981004000049.7514.93
210.10999004.981009025010000990.07998014.911008025099.3029.79
310.15998014.911013065010000985.14997029.7610120650148.5644.57

மற்றும் பல. எனவே, நீங்கள் எஸ்டிசிஜி வரியை கேப்பிட்டல் கெயினிற்கு மட்டுமே செலுத்துகிறீர்கள், முழு வித்டிராவல் தொகைக்கு அல்ல.

முடிவு-

நீங்கள் அமைதியான ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை வாழ, ஏற்கனவே பெறும் வருமானத்தை பூர்த்தி செய்ய அல்லது நீங்கள் இருக்கும் வேறு எந்த நிலையற்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு கூடுதல் வழக்கமான பண வரவு தேவைப்படும்போது எஸ்டபிள்யுபி உங்களுக்கு சிறந்த ஃபால்பேக் தேர்வாக இருக்கும். நீங்கள் எஸ்டபிள்யுபி முடிவை எடுப்பதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


​​
​​
பொறுப்புத் துறப்பு:
முதலீட்டாளர்களுக்கான பயனுள்ள தகவல்: அனைத்து மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களும் ஒரு-முறை கேஒய்சி(உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகளை மட்டுமே கையாள வேண்டும், அவை எஸ்இபிஐ இணையதளத்தில் 'இடைத்தரகர்கள்/ சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களின் கீழ் சரிபார்க்கப்பட வேண்டும்'. உங்கள் புகார்களை தெரிவிக்க, நீங்கள் www.scores.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். கேஒய்சி பற்றிய மேலும் தகவலுக்கு, பல்வேறு விவரங்களின் மாற்றம் பற்றி அறிய மற்றும் புகார்களை தெரிவிக்க, mf.nipponindiaim.com/investoreducation/what-to-know-when-investing ஐ பார்வையிடவும் இது நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் கற்றல் மற்றும் விழிப்புணர்வு முயற்சியாகும்.

இங்குள்ள தகவல் பொதுவான படிப்பு நோக்கங்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன மற்றும் எனவே வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது ஒரு தொழில்முறை வழிகாட்டியாக கருதப்பட முடியாது. இந்த ஆவணம் பொதுவாக கிடைக்கக்கூடிய தகவல், உருவாக்கப்பட்ட தரவு மற்றும் பிற நம்பக்கூடிய ஆதாரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குனர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான மற்றும் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்த தகவலின் பெறுநர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் விசாரணைகளை நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுக்க வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனைகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த மெட்டீரியலின் தயாரிப்பு அல்லது வழங்குதலில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவர்களின் துணை நிறுவனங்கள் இந்த மெட்டீரியலில் உள்ள தகவலில் இருந்து ஏற்படும் இழந்த இலாபங்கள் உட்பட எந்தவொரு நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவான, தண்டனைக்குரிய அல்லது உதாரணமான சேதங்களுக்கும் எந்தவொரு வழியிலும் பொறுப்பேற்காது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த முடிவிற்கும் பெறுநர் மட்டுமே முழுப் பொறுப்பாளியாக இருப்பார்.
மொழி பொறுப்புத் துறப்பு:
கட்டுரையை அந்தந்த வட்டார மொழி(களுக்கு) மொழிபெயர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், ஏதேனும் குழப்பம் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், ஆங்கில மொழியில் உள்ள கட்டுரையே இறுதியானதாகக் கருதப்பட வேண்டும். இங்கு வழங்கப்பட்ட கட்டுரை பொதுவான வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் கருத்துகளாக மட்டுமே உள்ளன, எனவே இவை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்களாகவோ, பரிந்துரைகளாகவோ அல்லது தொழில்முறை ஆலோசனையாகவோ கருதப்படக்கூடாது. பொதுவில் கிடைக்கும் தரவு/தகவல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தரவு மற்றும் நம்பகமானதாகக் கருதப்படும் பிற ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர் அல்லது அவர்களின் இயக்குநர்கள், ஊழியர்கள், துணை நிறுவனங்கள் அல்லது பிரதிநிதிகள் ("நிறுவனங்கள் & அவற்றின் துணை நிறுவனங்கள்") அத்தகைய தகவலின் துல்லியம், முழுமை, போதுமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இந்தத் தகவலைப் பெறுபவர்கள் தங்கள் சொந்த பகுப்பாய்வு, விளக்கங்கள் மற்றும் ஆய்வுகளை நம்பியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவலறிந்த முதலீட்டு முடிவை எடுப்பதற்கு வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் தகவலைத் தயாரிப்பதில் அல்லது வழங்குவதில் ஈடுபட்டுள்ள நபர்கள் உட்பட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தகவல்களிலிருந்து எழும் லாப இழப்பு உட்பட, நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயலான, விளைவு ரீதியான, தண்டனை பெற்றுத்தரக்கூடிய அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்கமாட்டார்கள். இந்தக் கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட எந்த முடிவிற்கும் இதன் வாசிப்பாளர் மட்டுமே முழுப் பொறுப்பாவார்.
"மேலே உள்ள விளக்கங்கள் புரிந்துகொள்வதற்கு மட்டுமே, இது என்ஐஎம்எஃப்-இன் எந்தவொரு திட்டத்தின் செயல்திறனுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையது அல்ல. இங்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்கள் கருத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன, அதனால் வாசகரால் பின்பற்றப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கைக்கான எந்தவொரு வழிகாட்டுதல்கள் அல்லது பரிந்துரைகளையும் உருவாக்க வேண்டாம். இந்த தகவல் பொதுவான படிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது மற்றும் வாசகர்களுக்கு ஒரு தொழில்முறை வழிகாட்டியாக சேவை செய்வதற்காக அல்ல."

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
மேலே