Sign In

நிப்பான் இந்தியா ஓவர்நைட் ஃபண்டு பற்றிய அறிமுகம்

ஓவர்நைட் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஓபன்-எண்டட் கடன் திட்டம்

ஒரு டெஸ்ட் போட்டியை விட கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் ஏன் அதிக பார்வையாளர்கள் இருக்கின்றனர் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? ஏனெனில், நீங்கள் முடிவை அறிந்து நிம்மதியாக உறங்கலாம். டி20 ஃபார்மட் என்றால் இன்னும் சிறந்தது. கட்டமைப்பு, உற்சாகம் மற்றும் உறுதிப்பாட்டின் திருப்தி ஆகியவை உங்களை அதிகமாக விரும்பச் செய்கிறது. முதலீட்டுக்கான இதேபோன்ற அணுகுமுறை உங்களிடம் இருந்தால், ஒப்பீட்டளவில் குறைந்த அபாயத்தில் தினசரி வருமானத்தை வழங்கும் எங்கள் சமீபத்திய நிதி பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.

டிகோடிங் தி நிப்பான் இந்தியா ஓவர்நைட் ஃபண்ட்

எளிதாக புரியும்படி பார்த்தால், இது ஒரு வகையான டெப்ட் மியூச்சுவல் ஃபண்டு ஆகும், இது ஒரு நாளில் முதிர்ச்சியடையும் கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்கிறது. ஆம், நீங்கள் படித்தது உண்மைதான்! ஒரே வணிக நாள், நீங்கள் பண்ண வேண்டியதெல்லாம் முந்தைய நாளின் முதலீட்டின் முடிவை தெரிந்து கொள்வதாகும். சுவாரஸ்யமானது, அல்லவா?

தற்காலிகமாக முதலீடு செய்யப்பட வேண்டிய ஒரு மொத்த தொகை உங்களிடம் உள்ளதா? இதற்கான காரணம் அவசரகால நிதி உருவாக்கம் அல்லது சந்தையில் முதலீடு செய்ய வேண்டிய சரியான நேரமாக இருக்கலாம். இது உங்களுக்கான நிதி. இது உங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த அபாயத்தில் ஒரு நடுத்தர வருமானத்தை வழங்குகிறது. உங்களின் முதலீட்டு காலம் ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை இருக்கலாம். நீங்கள் பகுதியளவு வித்ட்ராவல்களையும் எதிர்நோக்குகிறீர்கள் என்றால் இந்த நிதி உங்களுக்கு பொருத்தமானது.

இது எப்படி வேலை செய்கிறது?

ஒவ்வொரு வணிக நாளும் தொடங்கும்போது, நிதி மேலாளர் 1 நாள் மெச்சூரிட்டி காலத்துடன் பத்திரங்களை வாங்குவார். எனவே, ஒவ்வொரு நாளும் வட்டி என்ஏவி க்கு சேர்க்கப்படும் மற்றும் புதிய வாங்குதல் நடக்கும். விளைவாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் வருமானத்தை சம்பாதிப்பீர்கள்.

சலுகை மீதான மெச்சூரிட்டி காலம் ஒரே நாள் என்பதால், இது வட்டி விகிதத்தில் மாற்றம் அல்லது வழங்குநரின் கடன் மதிப்பீட்டில் மாற்றம் போன்ற பத்திரங்களுடன் பொதுவாக தொடர்புடைய எந்தவொரு அபாயங்களையும் குறைக்கிறது.

கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்

கவனிக்கப்பட வேண்டிய சில கூடுதல் அம்சங்கள் கீழே உள்ளன-

  • ஒப்பீட்டளவில் குறைவான ஆபத்து
  • பெரும்பாலும் கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் அடுத்த வணிக நாளில் முதிர்ச்சியடைகின்றன
  • ஒவ்வொரு நாளும் வருமானங்கள்
  • முதலீட்டு ஹாரிசான் 1 நாள் முதல் 1 மாதம் வரை
  • பூஜ்ஜிய லாக்-இன் காலம்
  • டி+1 அடிப்படையில் ரிடெம்ப்ஷன்கள்
  • முதல் பர்சேஸ்- ₹ 5,000 மற்றும் அதன் பிறகு ₹.1-யின் மடங்குகளில்
  • கூடுதல் பர்சேஸ்- ₹ 1,000 மற்றும் அதன் பிறகு ₹.1-யின் மடங்குகளில்
  • நேரடி/வழக்கமான திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டங்கள்/விருப்பங்கள், அதாவது:
    • வளர்ச்சி/டிவிடெண்ட் விருப்பம்
    • தினசரி/வாரம்/மாதாந்திர/காலாண்டு டிவிடெண்ட் மறுமுதலீட்டு விருப்பம்
    • மாதாந்திர/காலாண்டு டிவிடெண்ட் பேஅவுட் விருப்பம்
நிப்பான் இந்தியா ஓவர்நைட் ஃபண்ட்

இந்த தயாரிப்பு தேடும் முதலீட்டாளர்களுக்கு பொருத்தமானது*

  • குறுகிய காலத்தில் வருமானம்
  • ஓவர்நைட் மெச்சூரிட்டியுடன் கடன் மற்றும் பண சந்தை கருவிகளில் முதலீடு

*தயாரிப்பு தங்களுக்கு பொருத்தமானதா என்பது பற்றிய சந்தேகம் இருந்தால் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.

Riskometer - Nippon India Mutual Fund  
பொறுப்புத்துறப்பு:

இங்குள்ள தகவல் பொதுவாக வாசிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வெளியிடப்படும் கருத்துக்கள் கருத்துக்களாக மட்டுமே கருதப்பட வேண்டும், எனவே இதனை வாசகர்களுக்கான வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் அல்லது தொழில்முறை வழிகாட்டியாக கருதப்படக்கூடாது. எந்தவொரு முதலீடுகளையும் மேற்கொள்வதற்கு முன்னர், வாசகர்கள் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையை பெறுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள், தகவல் பெற்ற முதலீட்டு முடிவை எடுக்க உள்ளடக்கங்களை சரிபார்க்கவும். இதில் உள்ள தகவல்களிலிருந்து எழும் எந்தவொரு சேதத்திற்கும் ஸ்பான்சர், முதலீட்டு மேலாளர், அறங்காவலர், அந்தந்த இயக்குநர்கள், பணியாளர்கள், கூட்டாளிகள் அல்லது பிரதிநிதிகள் யாரும் இழந்த இலாபம் உட்பட நேரடி, மறைமுக, சிறப்பு, தற்செயல், விளைவு, தண்டனை அல்லது முன்மாதிரியான சேதங்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

மேலும் விவரங்கள் மற்றும் செயல்முறைகளுக்கு தயவுசெய்து நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டில் எங்களை தொடர்பு கொள்ளவும். நீங்கள் எங்களை 18602660111 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது இமெயில் அனுப்பலாம் [email protected].


Get the app